Home /News /entertainment /

பிக் பாஸ் வீட்டில் அபிநய், நிரூப்புடன் இணைந்து சிகரெட் புகைக்கும் அபிராமி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் வீட்டில் அபிநய், நிரூப்புடன் இணைந்து சிகரெட் புகைக்கும் அபிராமி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

அபிராமி

அபிராமி

Bigg Boss Abhirami | இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்னும் 1 வாரம் கூட ஆகாத நிலையில் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை இது கிளப்பியுள்ளது. இதுவரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பலவற்றை எடிட் செய்து போட்டிருந்தனர். ஆனால், தற்போது ஓடிடியில் ஒளிபரப்பு ஆகிவரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எந்தவொரு எடிட் இல்லாமலே ஒளிபரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதே போன்று மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காட்டிலும் பிக் பாஸ் ஷோவின் டி.ஆர்.பி எப்போதும் அதிகமாகவே இருக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் இதே போன்று நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து பிரியங்கா மற்றும் பாவனி ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

இந்நிலையில் 'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற புதிய பரிமாணத்தில் மற்றுமொரு அத்தியாயத்தை தொடங்கி உள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த அறிவிப்பு வந்த உடனே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினைஉண்டாக்கியது. இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 1 முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் புரோமோ மக்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது. அதன்படி இதன் முதல் நாள் எபிசோடு மட்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்து கொண்டுள்ளனர்.



இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்னும் 1 வாரம் கூட ஆகாத நிலையில் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை இது கிளப்பியுள்ளது. இதுவரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பலவற்றை எடிட் செய்து போட்டிருந்தனர். ஆனால், தற்போது ஓடிடியில் ஒளிபரப்பு ஆகிவரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எந்தவொரு எடிட் இல்லாமலே ஒளிபரப்பி வருகின்றனர். எனவே உள்ளே நடப்பதை முழுவதுமாக ரசிகர்களால் அப்படியே பார்க்க முடியும். பிக் பாஸ் வீட்டுக்குள் புகை பிடிப்பதற்கென்று ஒரு தனி அறை இருப்பது பற்றி அனைவருக்கும் தெரியும்.



இது தான் தற்போது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. புகைப்பிடிக்கும் அறையில் அபிநய், ஷாரிக், நிரூப் ஆகியோர்களுக்கு பின்புறமாக ஒரு பெண் போட்டியாளரும் அமர்ந்துள்ளார். இதை கண்ணாடியில் பார்க்க முடிகிறது. அவர்தான் அபிராமி. அவரும் அங்கு நின்று புகைப்பிடிக்கும் காட்சி ஒளிபரப்பாகி உள்ளது. இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிலர் எப்படி பெண்கள் புகை பிடிக்கலாம் என்று கருத்து கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம் புகை பிடிப்பது என்பது அவரவர் விருப்பம் என்று கூறி வருகின்றனர். மேலும் பலர் இந்த காட்சியை பகிர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Actress abhirami, Bigg Boss Tamil, Viral Video

அடுத்த செய்தி