Home /News /entertainment /

பிக்பாஸை விட்டு வெளியே போன அபிநய் இடமிருந்து இப்படியொரு பதிவா?

பிக்பாஸை விட்டு வெளியே போன அபிநய் இடமிருந்து இப்படியொரு பதிவா?

பிக் பாஸ் அபிநய்

பிக் பாஸ் அபிநய்

” பிக்பாஸ் பயணத்திற்கு என்னுடைய குடும்பத்திற்கு தான் நன்றி சொல்லவேண்டும். அவர்கள்தான் என்னை மிகவும் நம்பினார்கள்”

  பிக் பாஸின் 5ம் சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 3-ம் தேதி ஆரம்பித்த பிக்பாஸ் சீசன் 5, மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. பிக்பாஸ் சீசன் 5 துவங்கிய போது இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரது பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் இருந்தார்கள்.

  தற்போது இந்த நிகழ்ச்சி 10 போட்டியாளர்களுடன் 80 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர் தான் அபிநய். இவர் கணித மேதை ராமானுஜரின் வாழக்கை வரலாற்று கதையில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சென்னை 28 உள்ளிட்ட சில படங்களிலும் அவர் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், இவை எதுவும் அவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுக்கவில்லை.

  இந்நிலையில் தான் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் நன்கு விளையாடி வந்தார். பிக்பாஸ் வீட்டில் பாவனியுடன் இவருக்கு நல்ல நட்பு கிடைத்தது. இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்களாகவே பழகி வந்தனர். இருப்பினும், இவர்கள் இருவரின் நட்புறவு ஒரு கட்டத்தில் கேள்விக்குறியானது. இறுதியில் பாவனியே அபிநய் குறித்து பேசிய சில விஷயங்களை குறும்படமாக கமல்ஹாசன் போட்டு காண்பித்ததில் இருந்து அபிநய் பாவனியிடம் இருந்து விலகி இருந்தார். ஆனால் போட்டியில் இருந்து அபிநய் வெளியேற முக்கிய காரணமே இவரது பெயர் பாவனி விஷயத்தில் டேமேஜ் ஆனது தான்.

  இதையும் படிங்க.. அப்படி ஒரு லவ்.. யாஷிகாவை பார்த்ததும் காதலில் உருகிய நிரூப்.. இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் பதிவை போட்டுள்ளார் அபிநய். அதில் "மீண்டும் ரியல் உலகத்திற்கு வந்து இருப்பதில் மகிழ்ச்சி. இந்த பிக்பாஸ் பயணத்தில் எனக்கு நீங்கள் அளித்த அன்பையும் ஆதரவையும் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். இந்த 78 நாளில் நான் நிறைய விஷயங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதுவும் கமல் சார் போன்ற ஒரு மிகப் பெரிய மனிதர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் நான் இருந்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்க்கையில் எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கும் அதை எந்த பக்கத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை பயணமும் அமையும்.   
  View this post on Instagram

   

  A post shared by Abhinay (@abhinayvaddi)


  நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்தது போல எனக்கு அதிர்ஷ்டம் அமையவில்லை ஆனால், எனக்கு ஒரு அன்பான குடும்பம் கிடைத்திருக்கிறது. எப்போதும் என்னுடைய இன்ப துன்பங்களில் அவர்கள் எனக்காக நின்று இருக்கிறார்கள். ஒரு சில சமயங்களில் என்னை தவறாக புரிந்து கொண்டு இருக்கலாம். ஆனால், அனைத்திற்கும் மேலாக இது வெறும் ஒரு நிகழ்ச்சிதான் அதை நாம் அப்படி தான் பார்க்கவேண்டும். வாழ்க்கை உங்களுக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்து உங்களை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கும் இவை அனைத்தையும் நான் நல்ல விதமாகவே பார்த்து என்னுடைய வருங்காலத்தை நான் சிறப்பாக அமைத்துக் கொண்டு என்னுடைய குடும்பத்தாருக்கும் என்னை விரும்புவர்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பேன்.

  இதையும் படிங்க... தங்கை கணவரை அர்ச்சனா இப்படி அசிங்கப்படுத்தி இருக்க கூடாது.. பிக் பாஸ் அர்ச்சனாவின் வைரல் வீடியோ!

  என்னுடைய பிக்பாஸ் பயணத்திற்கு என்னுடைய குடும்பத்திற்கு தான் நன்றி சொல்லவேண்டும். அவர்கள்தான் என்னை மிகவும் நம்பினார்கள். உங்களின் அன்பிற்கும் வாக்குகளுக்கும் மிக்க நன்றி, என்றும் உங்களை மறக்க மாட்டேன். இந்த தருணங்களை நான் வாழ்நாள் முழுவதும் நினைத்து பெருமை கொள்வேன் இது வெறும் ஆரம்பம் தான் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான விஷயங்கள் அமைய உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி