Home /News /entertainment /

சீரியலுக்காக இப்படியொரு தியாகமா? விஜய் டிவி நடிகையை புகழ்ந்து தள்ளும் சீரியல் நடிகர்

சீரியலுக்காக இப்படியொரு தியாகமா? விஜய் டிவி நடிகையை புகழ்ந்து தள்ளும் சீரியல் நடிகர்

பவித்ரா ஜனனி

பவித்ரா ஜனனி

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்த போது, பவித்ராவுக்கு ட்ரெஸ் மாற்ற கூட இடமில்லையாம்.

    தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகையை அந்த சீரியலின் நடிகர் புகழ்ந்து தள்ளும் வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அப்படி என்ன செய்தார்? வாங்க பார்க்கலாம்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக மறிவிட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் இந்த சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் பவித்ராவும் வினோத் பாவும் தான். அபி - வெற்றியாக இவர்களின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஹிட் அடிக்க , ரசிகர்கள் இவர்களை கொண்டாடுகின்றனர். அதே போல் சீரியலில் வரும் அடுத்தடுத்த ட்விஸ்டுகளால் நல்ல டி.ஆர்.பி ரேட்டிங்கில் செல்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இந்த சீரியலை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். முதலில் இந்த சீரியல் மாலை நேரத்தில் ஒளிப்பரப்பட்டது. பின்னர் மதிய நேரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்பு நேயர் விருப்பமாக பிரைம் டைமிங்கில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

    இதையும் படிங்க..கின்னஸில் இடம் பிடித்த சன் டிவி அபியும் நானும் சீரியல் குழந்தை நட்சத்திரம்! 7 வயதில் இப்படியொரு சாதனையா?

    கதைப்படி இப்போது வெற்றி, ஏன் ரவுடியாக மாறினார், பூங்காவனத்துடன் ஏன் சேர்ந்தார்? போன்ற கேள்விகளுக்கு அபி விடை கண்டுப்பிடிக்கும் டிராக் ஒளிப்பரப்பாகி வருகிறது. அதாவது வெற்றியின் கல்லூரி கதை. இதற்கு முன்பு,  வெற்றியும் அபியும் காட்டு பகுதியில் மாட்டிக் கொண்டு, ரவுடிகளிடம் இருந்து தப்பிய காட்சிகள் ஒளிப்பரப்பாகின. இதற்காக சீரியல் குழு கொடைக்கானல் சென்று இருந்தது. இந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இந்த காட்சிகளை படமாக்கிய போது சீரியல் நாயகி பவித்ரா, சில பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கிறார். அதுக் குறித்து சீரியலின் ஹீரோ வினோத் பாபு ஷேர் செய்து இருக்கிறார்.

    உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்.. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த ஈபிஎஸ்

    அதாவது விஜய் டிவி டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் முன்னோட்டம் தற்போது களைக்கட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு புரமோவாக யூடியூபில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நவீன் மனைவி கலந்துக் கொண்டு பேசிய வீடியோ வைரலான நிலையில் தற்போது வினோத் பாபு பவித்ரா குறித்து பேசி இருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.



    தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்த போது, பவித்ரா ட்ரெஸ் மாற்ற கூட இடமில்லையாம். மலை பிரதேசம் என்பதால் கேரவன், ரூமுக்கு சென்று மறுபடியும் ட்ரெஸ் மாற்றி வந்து ஷூட்டிங் இடத்துக்கு போவது வாய்ப்பில்லாததால் 3 நாட்கள் சுற்றி புடவையை கற்றிவிட்டு அங்கையே ஆடை மாற்றி இருக்கிறார். இந்த தருணத்தை, நடிப்பில் பவித்ராவுக்கு இருக்கும் ஆர்வத்தை பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார் வினோத்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி