Home /News /entertainment /

வருத்தத்தில் ரேஷ்மா - மதன் ரசிகர்கள்.. முடிவுக்கு வரும் அபி டெய்லர்!

வருத்தத்தில் ரேஷ்மா - மதன் ரசிகர்கள்.. முடிவுக்கு வரும் அபி டெய்லர்!

அபி டெய்லர்

அபி டெய்லர்

சீரியலின் டி.ஆர்.பி குறைந்து உள்ளதால் அபி டெய்லர் சீரியலை முடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அபி டெய்லர் சீரியல் இந்த வாரத்துடன் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் பூவே பூச்சூடவா ரேஷ்மா - மதன் லீட் ரோலில் நடிக்கின்றனர். சமீப காலமாக வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்களுக்கு கலர்ஸ் தமிழ் சேனல் அதிகளவில் முக்கியத்துவம் தந்து வருகிறது. அந்த வரிசையில் அபி டெய்லர் சீரியல் முழுக்க முழுக்க அபி என்ற பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை கண்முன் நிறுத்தியது. இந்த சீரியலின் லீட் ரோலில் நடிக்கும் ரேஷ்மா - மதன் உருக உருக காதலித்து பின்பு ரியல் ஜோடிகளாக மாறினர். இப்போது இருவரும் சேர்ந்து ஒரே சீரியலில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

    ஸ்பெயினில் கெத்து பண்ண நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. தேசிய கொடியை பறக்க விட்ட மொமண்ட்!

    இந்நிலையில் இவர்கள்  சேர்ந்து நடிக்கும் இந்த சீரியல் கிளைமாக்ஸை நெருங்கி விட்டது. வரும் 20ஆம் தேதியுடன் சீரியல் முடிய இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் இரவு 7.30 மணிக்கு  பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வந்தது. பின்பு புதியதாக தொடங்கப்பட்ட பச்சைக்கிளி  சீரியலுக்காக நேரம் மாற்றப்பட்டது. இந்நிலையில் சீரியலின் டி.ஆர்.பி குறைந்து உள்ளதால் அபி டெய்லர் சீரியலை முடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்த தகவல் ரேஷ்மா மற்றும் மதன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கதைப்படி இப்போது வில்லி அனாமிகா கோயில் அன்னத்தானத்தில் விஷத்தை கலந்து அசோக் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார். ஆனால் கடைசியில் விஷம் அவர் குடிக்கும் ஜூஸில் கலக்கப்படுகிறது. அனாமிகாவும் அதை குடித்து விடுகிறார். அவர் பிழைப்பாரா? அசோக் குடும்பம் தப்பித்தார்களா? போன்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸில் விடை கிடைத்து அதோடு சீரியலும் முடிக்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி