கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலின் ஒளிப்பரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றம் அபி டெய்லர் சீரியல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சன் டி.வி, விஜய் டி.வி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் கலர்ஸ் தமிழ் சேனல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட பல சீரியல்களை ஒளிப்பரப்புகிறது அதில் ஒன்று தான் ‘அபி டெய்லர்’ . இந்த சீரியலில் பூவே பூச்சூடவா ரேஷ்மா - மதன் லீட் ரோலில் நடிக்கின்றனர். ரீல் ஜோடிகளான இவர்கள் உருக உருக காதலித்து பின்பு ரியல் ஜோடிகளாக மாறினர். இப்போது இருவரும் சேர்ந்து ஒரே சீரியலில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
அண்ணனுக்கு முடியாத போது, இது இப்ப தேவையா? பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு வந்த சோதனை!
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. இந்த சேனலில் ஒளிப்பரப்பான சிவகாமி, திருமணம், ‘அம்மன் 3’, ‘இதயத்தை திருடாதே போன்ற சீரியல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த லிஸ்டில் அபி டெய்லர் சீரியலுக்கும் நிச்சயம் இடம் உண்டு. காதல் மற்றும் குடும்ப பின்னணியை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறை ரசிகர்களும் ஏராளமாக இருக்கின்றனர்.
கதையின் நாயகியான அபிராமி சம்பாதிக்கும் பணத்தை அவரின் அப்பா வீண் செலவு செய்து அழிக்கிறார். அபிராமி,‘அபி டெய்லர்’ என்ற பெயரில் சிறு தொழில் நடத்தி மொத்த குடும்பத்தையும் கவனித்து வருகிறார். அப்போது தான் தற்செயலாக அபிராமி தொழில் அதிபர் அசோக் இருவரும் சந்திக்கிறார்கள். கடைசியில் இருவருக்கும் திருமணம் ஆகிறது. அதற்கு பின்பு இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் தான் சீரியலின் கதை. இதற்கு முன்பு கலர்ஸ் தமிழில் இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு பீக் டைமில் ஒளிப்பரப்பாகி வந்தது
ஈரமான ரோஜாவே சீரியலுக்கு வந்த சோதனை.. விக்ரம் பட பாடலை போட்டது குத்தமா?
இந்நிலையில் கடந்த திங்கள் முதல் (ஜூலை 4 ) ஆம் தேதியில் இருந்து அபி டெய்லர் சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது புதிய நேரத்தில் மாலை 6.30 மணிக்கு அபி டெய்லர் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நேரம் மாற்றத்துக்கு டி.ஆர்.பி ரேட்டிங் மற்றும் புதியதாக தொடங்கப்பட்ட ‘பச்சைக்கிளி’ சீரியலும் காரணம் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
பச்சைக்கிளி சீரியலில் அரண்மனை கிளி புகழ் மோனிஷா நடிக்கிறார். இவருக்கு மூத்த அண்ணனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியும் நடிக்கிறார். இந்த புதிய மாற்றம் இப்படியே தொடருமா ? இல்லை இடையில் மாற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Reshma, Colors Tamil | கலர்ஸ் தமிழ், Television, TV Serial