• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’சிண்ட்ரெல்லா’ திரைப்படத்தில் அபிடெய்லர் நட்சத்திரம்!

’சிண்ட்ரெல்லா’ திரைப்படத்தில் அபிடெய்லர் நட்சத்திரம்!

சிண்ட்ரெல்லா

சிண்ட்ரெல்லா

இதை உங்களிடம் கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி. இதற்கு முன்பு நீங்கள் கொடுத்த அன்பு, ஆதரவு

  • Share this:
    சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார், அபிடெய்லர் சீரியல் புகழ் ஜெயஸ்ரீ.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதன் பாண்டியன் - ரேஷ்மா முரளிதரன் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கும் அபி டெய்லர் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெய்ஸ்ரீ, ராய்லட்சுமி மற்றும் ஷாக்சி அகர்வால் நடிப்பில் வெளியாகியிருக்கும் சிண்ட்ரெல்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்திருக்கும் அவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிண்ட்ரெல்லா திரைபடம் குறித்து தெரிவித்துள்ளார்.

    சீரியலில் கொடுத்த அன்பும், ஆதரவைப்போல் வெள்ளித்திரையில் நுழைந்திருக்கும் தனக்கு நண்பர்களும், ரசிகர்களும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர், ரசிகர்களின் மேலான வாழ்த்துகளுடன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கியிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாவில் அவர் எழுதியுள்ள பதிவில், " ஹாய் பிரண்ட்ஸ்/ பேன்ஸ், சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் மூலம் வெள்ளிதிரையில் அறிமுகமாகிறேன்.

    இதை உங்களிடம் கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி. இதற்கு முன்பு நீங்கள் கொடுத்த அன்பு, ஆதரவு மற்றும் வாழ்த்துகளை தொடர்ந்து என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்கும் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு அபி டெய்லரில் நடிக்கும் மதன் பாண்டியன் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். எங்க வீட்டு சிண்ட்ரெல்லா என ஜெய்ஸ்ரீ-ஐ குறிப்பிட்டுள்ளார். ஜெய்ஸ்ரீக்கு வாழ்த்துக்களை கூறியுள்ள ரேஷ்மாவும், அவரை வெள்ளித்திரையில் காண ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அபிடெய்லர் சீரியலுக்கு முன்பு கங்கா சீரியலில் அபிராமி ரோலில் ஜெய் ஸ்ரீ நடித்திருந்தார்.

    Abhi Tailor actress Jayasri making her silver screen debut with Raai Lakshmi's Cinderella, colors tamil, colors tamil voot, colors tamil movies, colors tamil app, colors tamil instagram, colors tamil trp, colors tamil new serial promo, colors tamil jayasri, abhi tailor jayasri, ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா, கலர்ஸ் தமிழ் ஜெயஸ்ரீ, அபி டெய்லர் ஜெயஸ்ரீ
    ஜெயஸ்ரீ


    சிண்ட்ரெல்லா திரைப்படத்தில் லீட் ரோலில் ராய் லட்சுமி நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர், மை டியர் பூதம் அபிலாஷ், அன்பு தாசன், கல்லூரி வினோத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சிண்ட்ரெல்லா திரைப்படம் குறித்து பேசிய ராய் லட்சுமி, நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரை மூலம் ரசிகர்களை காண்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். காஞ்சனா, அரண்மனை படங்களுக்குப் பிறகு, அதே மாதிரியான குணாதிசயம் கொண்ட பேய் கதாப்பாதிரங்களாகவே வந்ததால், சில படங்களை நிராகரித்ததாக தெரிவித்த ராய்லட்சுமி, சிண்ட்ரெல்லா திரைப்படம் மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும் என கூறியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by imjayasri (@jayashri_official)






    "நானும் நிறைய பேய் படங்களை பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஆனால், அந்தப் படங்களில் இருந்து வித்தியாசமானதாக சிண்ட்ரெல்லா இருக்கும். நிறைய பேன்டஸி விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. சிண்ட்ரெல்லா என்ற தலைப்பே எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் சிண்ட்ரெல்லாவில் நடிக்க ஒப்புக்கொண்டேன்" என ராய்லட்சுமி கூறினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: