• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மூன்று ஜட்ஜ்களுடன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி டீசர் வெளியானது!

மூன்று ஜட்ஜ்களுடன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி டீசர் வெளியானது!

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பல சுற்று ஆடிஷன்களுக்குப் பிறகு 20 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த போட்டியாளர்கள் தங்கள் சமையல் திறன்களை வெளிப்படுத்துவார்கள் மற்றும் அதில் ஒருவர் மாஸ்டர் செஃப் தமிழின் அறிமுக சீசன் டைட்டிலை வெற்றி பெறுவார்.

  • Share this:
சின்னத்திரையில் சீரியல்கள், எண்ணற்ற நிகழ்ச்சிகள் இருந்தாலும் உணவு சமைப்பது போன்ற ஷோக்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெரும். குறிப்பாக சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோ பெரும் வரவேற்பை பெற்றது.

குக் வித் கோமாளி சீசன் 3 நிறைவடைந்துள்ள நிலையில் சீசன் 4 தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சீசன் 3 மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து அதில் பங்கேற்றவர்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளனர். மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலிலும் முன்னிலை பெற்றது.

இதனை பார்த்த மற்ற தொலைக்காட்சிகளும் இதுபோன்ற ஷோ ஒன்றை நடத்த திட்டமிட்டனர். அந்த வரிசையில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை சன் டிவி எடுத்து வருகிறது.

ALSO READ  |  ’தல லுக் சூப்பர்னு சொன்னது ஒரு குத்தமா?’ சாந்தனுவுக்கு நேர்ந்த சங்கடம்

மாஸ்டர் செஃப் தமிழ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமையல் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக உள்ளது. இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அந்த படப்பிடிப்பில் தமன்னாவும் கலந்து கொண்டார். அப்போது விஜய் சேதுபதியும் அவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

 

  
View this post on Instagram

 

A post shared by SunTV (@suntv)


 

 

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கான டீசர் சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சியில் பிரபல சமையல் வல்லுநர்களை அறிமுகப்படுத்தியுள்ளது தெரிகிறது. ஆர்த்தி சம்பத், ஹரிஷ் ராவ் மற்றும் கவுசிக் ஆகியோர் இதில் ஜட்ஜ்களாக உள்ளனர்.

ALSO READ  |  200 எபிசோடுகளைக் கடந்தது திருமகள் சீரியல் - சீரியல் குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி!

அந்த டீசரில் முதல் வரும் கவுசிக் ஒரு தரமான சமையலை தேர்ந்தெடுக்குமாறு கூறினால் நான் பார்க்க போவது அந்த உணவின் சிந்தனை என கூறுகிறார். பின்னர் வரும் ஆர்த்தி சம்பத் பார்த்தால் பசி தீரும், இந்த ஷோவில் எனது ஒரே லட்சியம் உணவின் தோற்றம் என்கிறார்.இதனை தொடர்ந்து வரும் ஹரிஷ் ராவ் பசி தீர்ந்தாலும், ருசி தீருமா? இந்த அறுசுவை அரங்கத்தில் என்னுடைய தேடல் உணவின் சுவை என்கிறார். இறுதியாக வரும் விஜய் சேதுபதி உலகமே கொண்டாடப்போகும் போகும் அந்த ஒரு மாஸ்டர் நம்ம ஊரு மசாலா கலந்து நன்கு பக்குவமாக பதம் பார்த்து உங்களுக்கு விருந்து வைக்க போகிறார்கள் நம்ம ஊரு ஜட்ஜ்ஸ், மாஸ்டர் செஃப் விரைவில் உங்கள் சன் டிவியில், பார்க்க தயாராக இருங்கள் என கூறுவதுடன் முடிவடைகிறது.

ALSO READ  |  வெள்ளத்தில் அடித்துச் சென்ற பிரபல பாடகர் சடலமாக மீட்பு

இந்த வீடியோவை இதுவரை 60000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பல சுற்று ஆடிஷன்களுக்குப் பிறகு 20 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.இந்த போட்டியாளர்கள் தங்கள் சமையல் திறன்களை வெளிப்படுத்துவார்கள் மற்றும் அதில் ஒருவர் மாஸ்டர் செஃப் தமிழின் அறிமுக சீசன் டைட்டிலை வெற்றி பெறுவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: