Home /News /entertainment /

குடிக்கவில்லை.. தப்பித்து ஓடவும் இல்லை.. கண்ணீருடன் விபத்து பற்றிய பேசிய ஆர்த்தி கணேஷ்!

குடிக்கவில்லை.. தப்பித்து ஓடவும் இல்லை.. கண்ணீருடன் விபத்து பற்றிய பேசிய ஆர்த்தி கணேஷ்!

ஆர்த்தி கணேஷ்கர்

ஆர்த்தி கணேஷ்கர்

சில வருடங்களுக்கு முன்பு ஆர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சில நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்து இருந்தார்.

  நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர் கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடி விட்டதாக இணையத்தில் பரவிய தகவலுக்கு முதன்முறையாக ஆர்த்தியும், கணேஷ்கரும் கண்ணீருடன் விளக்கம் அளித்துள்ளனர். கணேஷ்கர் குடித்து விட்டு கார் ஓட்டியதாக வெளியான தகவலை இருவரும் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

  வெள்ளித்திரையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி தனக்கென தனி பெயர், புகழை சம்பாதித்து இருக்கும் ஜோடிகள் ஆர்த்தி கணேஷ்கர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இருவரும் ஒரு கட்டத்தில் கணவன் மனைவியாக மாறினர். இவர்களின் திருமணத்திற்கு ஒட்டு மொத்த திரை பிரபலங்களும் அணிவகுத்து வந்தனர். தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு வேடத்தில் இருவரும் நடித்து வருகின்றனர். அது தவிர்த்து சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் ஆர்த்தி கணேஷ்கரை சேர்ந்து பார்க்கலாம். சில வருடங்களுக்கு முன்பு ஆர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சில நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்து இருந்தார்.

  இதையும் படிங்க.. மீண்டும் விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் துர்கா… ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

  அவை எல்லாவற்றையும் துணிச்சலுடன் கடந்து வந்தவர், இன்று சொந்தமாக யூடியூப் சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார். இப்படி இருக்கையில் சில தினங்களுக்கு முன்பு, ஆர்த்தி கணவர், கணேஷ்கர் சென்னை பட்டினப்பாக்கம் சாலையில் கார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகின. அதுமட்டுமில்லை, கணேஷ்கர் குடித்து விட்டு காரை ஓட்டியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தொடர்ந்து இணையத்தில் ஏகப்ப்ட்ட தகவல்கள் உலா வந்தன. ஆர்த்தியிடம் கணேஷ்கர் குறித்து போலீஸ் விசாரித்த போது, அவர் தெரியாது என பதில் கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

  இப்படி இருக்கையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உண்மையில் அந்த கார் விபத்தின் போது என்ன நடந்தது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த ஆர்த்தியும் கணேஷ்கரும் மருத்துவமனையில் இருந்தப்படியே பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கின்றனர்.அந்த பேட்டியில் அவர்கள் கூறிய தகவல்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அது என்னவென்றால் விபத்து நடந்த போது நான் குடிக்கவில்லை என்று கணேஷ்கர் குறிப்பிட்டுள்ளார்.

  இதையும் படிங்க.. சரஸ்வதிக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி.. தமிழ் இப்படி செய்யலாமா?

  அதுமட்டுமில்லை, ஆர்த்தியை புத்தக வெளியீட்டு விழா ஒன்றுக்கு டிராப் செய்துவிட்டு, மறுபடியும் அவரை பிக் அப் செய்ய கணேஷ்கர் பட்டினப்பாக்கம் ரோட்டில் வெயிட் செய்து இருந்தாராம். அப்போது ஆர்த்தி நிகழ்ச்சி முடிந்து விட்டது வாங்கள் என கூறியிருக்கிறார். அவரை பிக் அப்ப செய்ய போகும் போது தான் இந்த விபத்து ஏற்பட்டதாம். ஸ்பீடு பிரேக்கர் இருந்ததை கவனிக்காமல் அதன் மேல் காரை வேகமாக ஏற்ற, கட்டுப்பாடு இழந்து சுவற்றில் காரை இடித்து விட்டதாக கணேஷ்கர் கூறியுள்ளார். இதனால் அவரின் நெஞ்சு, முதுகு, காலில் பலத்த அடி ஏற்பட்டு மூச்சு விட சிரமப்பட்டராம். அப்போது பட்டினப்பாக்கம் நகர மக்கள் தான், இவரை காப்பாற்றி, உடனே ஆர்த்திக்கு ஃபோன் செய்து வரவழைத்து ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  போர அவசரத்தில் காரை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். காரில் தான் கணேஷ்கரின் செல்ஃபோனும் இருந்து இருக்கிறது. பின்பு அவரை கணவரை அனுப்பி விட்டு ஆர்த்தி வீட்டுக்கு சென்று இருக்கிறார். அப்போது தான் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்க, இவர் விபத்து பற்றி விளக்கி இருக்கிறார். அவர்கள் கணேஷ்கரை விசாரிக்க வேண்டும் என்று சொல்லும் போது அப்பல்லோ ஆஸ்பிட்டல் சென்றுள்ளார் என்று கூறியிருக்கிறார். ஆனால் கணேஷ் அங்கே செல்லாமல் நண்பரின் வீட்டுக்கு சென்று இருக்கிறார். இந்த குழப்பத்தினால் தான் கணேஷ்கர் காணவில்லை என்ற வதந்திகள் பரவியதாக இருவரும் கண்ணீருடம் விளக்கியுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி