Home /News /entertainment /

பிரபல சின்னத்திரை ஜோடி ஆர்த்தி - கணேஷ்கர் ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்பிரைஸ்!

பிரபல சின்னத்திரை ஜோடி ஆர்த்தி - கணேஷ்கர் ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்பிரைஸ்!

ஆர்த்தி - கணேஷ்கர்

ஆர்த்தி - கணேஷ்கர்

சின்னத்திரை ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்பிரைஸாக ஆர்த்தியும் கணேஷ்கரும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கின்றனர்.

    வெள்ளித்திரையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி தனக்கென தனி பெயர், புகழை சம்பாதித்து இருக்கும் ஜோடி ஆர்த்தி கணேஷ்கர். இருவருமே குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகம் ஆனவர்கள். தங்களுடைய பாதையை சினிமாவில் தொடங்கி தற்போது வரை சினிமாவில் கழித்து வருகின்றனர். தற்சமயம் இருவரும் சேர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் சீசனில் 2 வில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். நடன போட்டி என்பது இவர்களுக்கு புதுசு இல்லை. கலா மாஸ்டர் நடத்திய மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆர்த்தி கணேஷ்கரின் நடனத்தை பார்த்த குஷ்பு, நமீதா, ரம்பா போன்றவர்கள் மிரண்டு போய் மனதார பாராட்டி தள்ளியுள்ளனர். இப்போதும் அதே பாசிடிவ் கமெண்டுகளை இருவரும் ரம்யா கிருஷ்ணனிடம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான்.

    அந்த நிகழ்ச்சிக்கு சித்து - ஸ்ரேயா தான் வரவேண்டும்.. அடம் பிடிக்கும் ரசிகர்கள்!

    பர்சனல் லைஃப்விலும் ஆர்த்தி - கணேஷ்கர் ஜோடி மிகவும் ஒற்றுமையாக இருக்க கூடியவர்கள். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் சரி ,ஜோடியாக தான் செல்வார்கள். சொல்லப்போனால் ஆர்த்தி தன்னுடைய 2 வயதிலே கணேஷ்கரை சந்தித்து விட்டார். இருவரும் குழந்தை நட்சத்திரமாக 80களில் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கினர். ஒரு கட்டத்தில் கணவன் மனைவியாக மாறினர். இவர்களின் திருமணத்திற்கு ஒட்டு மொத்த திரை பிரபலங்களும் அணிவகுத்து வந்தனர். தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு வேடத்தில் இருவரும் நடித்து வருகின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்பிரைஸாக ஆர்த்தியும் கணேஷ்கரும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கின்றனர். இது முழு நேர பயணம் இல்லை. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் வெற்றித் தொடரான அபியும் நானும் சீரியலில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்த்தி கணேஷர் என்ட்ரி கொடுக்கின்றனர். வரும் ஞாயிறன்று ஒளிப்பரப்பாகவுள்ள 1 மணி நேர சிறப்பு எபிசோடில் ஆர்த்தி - கணேஷ்கர் ரசிகர்களை மகிழ்விக்க போகிறார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

    மீண்டும் சீரியலில் நடிக்க போன குக் வித் கோமாளி பிரபலம்! யாருன்னு கெஸ் பண்ணுங்க!

    சமீப காலமாக வெள்ளித்திரை பிரபலங்கள் சின்னத்திரையில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுப்பது தொடர் கதையாகி வருகிறது அந்த லிஸ்டில் இப்போது ஆர்த்தியும் கணேஷர்கரும் சேர்ந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி