ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பூஜை அறை இல்லை.. ஹாலில் அம்மாவின் சிலை! ஆர்த்தி - கணேஷ்கர் வீட்டை பார்த்து இருக்கீங்களா?

பூஜை அறை இல்லை.. ஹாலில் அம்மாவின் சிலை! ஆர்த்தி - கணேஷ்கர் வீட்டை பார்த்து இருக்கீங்களா?

ஆர்த்தி - கணேஷ்கர்

ஆர்த்தி - கணேஷ்கர்

எந்தவித வாஸ்து சாஸ்திரமும் பார்க்காமல் மஞ்சள், பச்சை என வண்ணமயமாக தங்கள் வீட்டைவடிவமைத்து இருக்கிறார்கள்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலமான ஆர்த்தி கணேஷ்கரின் வீட்டை பார்த்து இருக்கீங்களா?

  வெள்ளித்திரையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி பிரபல ஜோடியாக வலம் வருகின்றனர் ஆர்த்தி - கணேஷ்கர். இயக்குனர் இமயம் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர்கள் இருவரும் குழந்தை நட்சத்திரமாக தங்களது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர்கள். சினிமாவை உயிருக்கு இணையாக பார்க்கும் இவர்கள் இருவரும் மறைந்த 2 மூத்த தலைவர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் கையாலும் விருதுகளை வாங்கியுள்ளனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் விஜய் டிவி பிபி ஜோடிகள் சீசன் 2வில் கலந்து கொண்டு ஃபைனல்ஸ் வரை சென்றனர்.

  நடன போட்டி என்பது இவர்களுக்கு புதுசு இல்லை. கலா மாஸ்டர் நடத்திய மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆர்த்தி கணேஷ்கரின் நடனத்தை பார்த்த குஷ்பு, நமீதா, ரம்பா போன்றவர்கள் மிரண்டு போய் மனதார பாராட்டி தள்ளியுள்ளனர். பர்சனல் லைஃப்விலும் ஆர்த்தி - கணேஷ்கர் ஜோடி மிகவும் ஒற்றுமையாக இருக்க கூடியவர்கள். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் சரி ,ஜோடியாக தான் செல்வார்கள். ”ஆர்த்திக்கு நான் குழந்தை, எனக்கு ஆர்த்தி குழந்தை” என எல்லா மேடைகளிலும் கணேஷ்கர் பதிவு செய்வார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தியின் அம்மா இறந்தார். அப்போது டிப்ரஷனில் சென்ற ஆர்த்தியை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வந்தார் கணேஷ்கர்.

  ' isDesktop="true" id="821503" youtubeid="4v9tAVIQzCE" category="television">

  இவர்களின் இவ்வளவு பாசிடிவிட்டிக்கு காரணமாக பல விஷயங்களை சொல்லலாம். முக்கியமாக இவர்கள் வசிக்கும் வீடு. வீடு முழுக்க எனர்ஜி பரவ வேண்டும் என எந்தவித வாஸ்து சாஸ்திரமும்  பார்க்காமல் மஞ்சள், பச்சை என வண்ணமயமாக தங்கள் வீட்டைவடிவமைத்து இருக்கிறார்கள் இருவரும். ஆர்த்தி - கணேஷ்கர் யூடியூப் சேனலில் இவர்களின் ஹோம் டூர் வீடியோ வெளியாகியுள்ளது. பெட் ரூம் மஞ்சள், கிச்சன் பச்சை நிறம் அதற்கு பின்னாடி ஒரு பாசிட்டிவான காரணம் என பல விஷயங்களை அந்த வீடியோவில் ஆர்த்தி ஷேர் செய்கிறார்.

  வீட்டை சுற்றி பெரிய பெரிய ஜன்னல்கள், பெட் ரூமில் வானத்தை அன்னாந்து பார்க்கும் அளவுக்கு கண்ணாடி ஜன்னல் என தனது வீட்டின் அழகை ரசிகர்களுடன் ஆர்த்தி இயல்பாக பகிர்கிறார். அதுமட்டுமில்லை வீட்டில் தனியாக பூஜை அறை வைத்துக் கொள்ளாமல் பெற்ற தாயையே சிலை போல் வடிவமைத்து தினமும் வணங்குகிறார் ஆர்த்தி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, Vijay tv, Youtube