பிக் பாஸ் சீசன் 5 இறுதி நிகழ்ச்சிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தந்தது நடிகர் ஆரி அர்ஜூனனின் ட்வீட். என்ன விவகாரம் அது? வாங்க பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்னதான் நெகடிவ் விமர்சனங்கள், ஸ்கிரிப்ட் என விமர்சிக்கப்பட்டாலும் அதை பார்க்கவும் ஒரு ரசிகர்கள் கூட்டம் தனியாக இருக்கிறது. ஒவ்வொரு பிக் பாஸ் சீசனும் தொடங்கிய உடனே, அதில் இருக்கும் போட்டியாளர்களை பற்றி தெரிந்து கொள்ளவும், மனம் கவர்ந்த போட்டியாளருக்கு ஓட்டு போடவும்,ஒவ்வொரு நாளும் புரமோவுக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களும் இங்கு ஏராளம். அந்த வகையில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை சந்தித்துள்ளது. ஐந்து சீசனும் மிகப் பெரிய ஹிட் தான்.
இதையும் படிங்க.. விஜய் டிவி தாமரை செல்விக்கு கொடுத்த சம்பளம் இவ்வளவு தான்! வெளியான ஷாக் தகவல்
இதில் 5 ஆவது சீசன் இறுதி நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இன்று மாலை விஜய் டிவியில் அவை டெலிகாஸ்ட் செய்யப்படவுள்ளது. இந்த 5 ஆவது சீசன் துவக்கத்தில் பெரிதும் கவனிக்கப்படவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல, பிரியங்கா, ராஜூ, தாமரை செல்வியால் சீசன் சூடுப்பிடித்து தற்போது வெற்றிக்கரமாக 106 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. பிக் பாஸ் 5 ஃபைனல்ஸ் என்றவுடன் ரசிகர்கள் ஒருவருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அவர் வேறு யாருமில்லை, முந்தைய பிக் பாஸ் சீசன்4 டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன்.
இவருக்கு
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த ரசிகர்கள் ஏராளம். ஒவொரு பிக் பாஸ் ஃபைனலஸ் எபிசோடிலும் அதற்கு முந்தைய சீசனின் வெற்றியாளர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவார். அந்த வகையில் இதுவரை ஆரவ், ரித்விக்கா, முகேன் ராவ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இருக்கின்றனர். அதே போல் பிக் பாஸ் 5ல் ஆரியும் வருவார் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க ஆனால் அது நடக்கவில்லை.
இதையும் படிங்க.. பிக் பாஸ் சீசன் வெற்றியாளர் யார்? 50 லட்சம் யாருக்கு? வெளியானது தகவல்!
தனது ரசிகர்கள் டிவியை பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என நினைத்த ஆரி, அவரே தனது
ட்விட்டர் பக்கத்தில் ”பிக் பாஸ் சீசன் 5 ஃபனல்ஸூக்கு நான் வரவில்லை. வருத்தம் வேண்டாம். நானும் ஆவலுடன் போட்டியாளர்களையும், உங்களையும் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன், ஆனால் இம்முறை பிக் பாஸ் குழுவின் இருந்து எனக்கு அழைப்பு விடுக்கவில்லை” என்று அதிர்ச்சியான தகவலையும் ஷேர் செய்து இருக்கிறார். இதனால் அவரின் ரசிகர்கள் விஜய் டிவி பிக் பாஸ் குழு மீது கோபத்தில் உள்ளனர்.
ஆரியை விஜய் டிவி கூப்பிடாமல் போனதற்கு என்ன காரணம்? என்ற பேச்சுகளும் வலைத்தளத்தில் உலா வருகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.