ஆஜித்தின் புதுமுயற்சிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் வாழ்த்து

ஆஜித்தின் புதுமுயற்சிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் வாழ்த்து

ஆஜித்

ஆஜித் புதிதாக திறந்திருக்கும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அவரது பிக்பாஸ் நண்பர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share this:
சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஏ.ஆர்.ரஹ்மான் கையில் விருது பெற்றவர் ஆஜித். அதைத்தொடர்ந்து சில திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். ஆஜித்தின் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதன் மூலம் பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று பிக்பாஸே கூறிய போதும் தனக்கு என்ன வருகிறதோ அதை மட்டுமே செய்வேன் என்று அமைதியாக இருந்த ஆஜித் பாலாஜி, சம்யுக்தா, கேப்ரியலா, ஷிவானி உள்ளிட்ட ஒரு சிலருடன் மட்டுமே நட்பு பாராட்டி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னரும் இந்த கேங் அவ்வப்போது சந்தித்துக் கொள்ளும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் பிக்பாஸூக்கு பின் தற்போது சென்னை சூளைமேட்டில் புதிய ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார் ஆஜித். அதன் திறப்பு விழாவுக்கு பாலாஜி, கேபி, ஷிவானி, சம்யுக்தா ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் எழுதியிருக்கும் ஆஜித், எனது ஸ்டுடியோ திறப்புக்காக நேரம் ஒதுக்கி நேரில் வந்த உங்களுக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது. நீங்கள் அற்புதமானவர்கள். சுரேஷ் தாத்தா மட்டும் இந்தப் படத்தில் இல்லை. திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவருக்கும் எனது மிகப்பெரிய நன்றி.” என்று கூறியுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Aajeedh Khalique (@aajeedh_khalique)


புகைப்படத்தில் இடம்பெறாத ரம்யா பாண்டியன் ஆஜித்தின் இந்த பதிவைப் பார்த்து கமெண்டில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: