• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டிஆர்பி-யில் கலக்கிவரும் பிரபல ஜீ தமிழ் சீரியல் முடிவுக்கு வருகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டிஆர்பி-யில் கலக்கிவரும் பிரபல ஜீ தமிழ் சீரியல் முடிவுக்கு வருகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியல்

அகிலாண்டேஸ்வரி நந்தினியை துப்பாக்கியால் சுட்ட பிறகு அவர் இறந்து விட்டாரா அல்லது உயிரோடு தான் இருக்கிறாரா ?

  • Share this:
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவை பெற்றுள்ள சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று.

    இந்த சீரியல் ஆரம்பமாகி 3 வருடங்களை கடந்தாலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களிடையே மிகவும் பிரபலமானதற்கு செம்பருத்தி சீரியலும் ஒரு முக்கிய காரணமாகும். அதற்கு கதைக்களம் ஒரு காரணமாக இருந்தாலும், அதில் நடித்து வரும் நடிகர்களும் மற்றொரு காரணமாக இருக்கின்றனர்.

    முதன் முதலில் இந்த சீரியல் ஆரம்பமான போது நடிகர் கார்த்திக் இந்த சீரியலில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் சீரியல் டிஆர்பி வரிசையின் டாப் லிஸ்டில் இருந்தது. கொரோனா நோய் தொற்று நாளில் கூட சீரியல் படப்பிடிப்பை நிறுத்தாமல் ஹைதராபாத் சென்று நடத்தினர். அதன்பின், சில காரணங்களால் நடிகர் கார்த்திக் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் சீரியலில் நுழைந்தார்.ஹீரோ மாற்றப்பட்டதால் சீரியலை பார்க்கும் ரசிகர்களின் வட்டாரம் குறைந்தது. இருந்தாலும் செம்பருத்தி சீரியல் ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வந்தவர்கள் இன்னும் இந்த சீரியலை பார்த்து வருகிறார்கள். மேலும், கதாநாயகியாக நடிக்கும் ஷபானா, முன்னணி நடிகை பிரியா ராமன் ஆகியோர் நடிப்பதால் இந்த சீரியல் இன்னும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் தற்போது முடிவிற்கு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் அதைப்பற்றி சீரியல் குழு இன்னும் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

    also read.. இந்த சின்ன வயசுல சீரியலில் லீட் ரோல்.. மிகப்பெரிய வெற்றி! பொறாமைப்பட வைக்கும் சக்தி!

    தற்போது இந்த சீரியலில் பல ட்விஸ்டுகள் நிறைந்த காட்சிகள் இடம்பெறுவதாலும் அடுத்தடுத்து வரப்போகும் எபிசோடுகளை வைத்தும் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது. அதில் அகிலாண்டேஸ்வரி நந்தினியை துப்பாக்கியால் சுட்ட பிறகு அவர் இறந்து விட்டாரா அல்லது உயிரோடு தான் இருக்கிறாரா என்று ஒரு பெரிய பிரச்சனையே போய்க்கொண்டிருக்கிறது.



    இந்த நிலையில் நந்தினியின் உடலை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. அவருடைய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்னவாக இருக்கும் என்று வனஜா, ஆதி, பார்வதி என எல்லோரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் பார்வதி கையில் ரிப்போர்ட் கிடைத்து விடுகிறது. அதில் நந்தினியின் இதயத்தில் குண்டு பாய்ந்து அவர் இறந்திருப்பதாக ரிப்போர்ட்டில் இருக்கிறது. இவ்வாறு பல பரபரப்புடன் இந்த சீரியல் தற்போது சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சீரியல் முடிவுக்கு வருகிறது என்ற செய்தி வெளியானதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்குள் சீரியல் முடிய போகிறதா என்றும் புலம்பி வருகிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: