Home /News /entertainment /

ரஜினி சீரியலில் பார்த்திபனுக்கு கல்யாணம்... பொண்ணு யார் தெரியுமா? புதிய அப்டேட்

ரஜினி சீரியலில் பார்த்திபனுக்கு கல்யாணம்... பொண்ணு யார் தெரியுமா? புதிய அப்டேட்

ரஜினி சீரியல்

ரஜினி சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ரஜினி. ஸ்ரேயா நாயகியாக நடித்து வரும் இந்த சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

  • News18
  • Last Updated :
    ரஜினி சீரியலில் பார்த்திபனுக்கு கல்யாணம் ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில் பொண்ணு யார் என்பது குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ரஜினி. ஸ்ரேயா நாயகியாக நடித்து வரும் இந்த சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    குடும்பத்துக்காக தனது ஆசைகளை துறந்த நாயகி ரஜினிக்கு அவருடைய குடும்பம் என்ன செய்கிறது? என்பது தான் சீரியல் கதைக்களம்.

    ரஜினி அனிதாவுக்கு செய்து கொடுத்த சத்தியம் காரணமாக பார்த்திபனுடனான காதலை தியாகம் செய்ய பார்த்திபனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருமணத்திற்கு நகை எடுப்பது, ஆடைகளை வாங்குவது என எல்லோரும் உற்சாகமாக இருந்து வர பார்த்திபன் ரஜனி மீது வைத்துள்ள காதலால் தவித்து வருகிறான்.

    பார்த்திபன் திருமண நிகழ்வுகளும் தொடங்கி விட ஒவ்வொரு சம்பிரதாயத்திலும் ரஜினி ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட பார்த்திபன் கல்யாண மண்டபத்தில் ரஜினியை பார்த்து கடைசியாக உன்னிடம் கேட்கிறேன் என மீண்டும் தனது காதல் குறித்து கேட்க ரஜினி என்ன பதில் சொல்ல போகிறாள்? செய்த சத்தியத்தை மீறி பார்த்திபன் காதலை ஏற்று கரம் பிடிப்பாளா? அல்லது பார்த்திபனை நிராகரிப்பாளா? என்ற கோணத்தில் வரும் நாட்களில் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

    Also read... காளி ஆவணப்படத்தின் கதை இதுதான் - இயக்குநர் லீனா மணிமேகலை விளக்கம்!

    மேலும் இந்த சீரியலில் கவிதா என்ற கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை என்ட்ரி கொடுக்க உள்ளார். அவரால் சீரியலில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஏற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Zee tamil

    அடுத்த செய்தி