பிக்பாஸ்: தலைவர் பதவிக்காக மூக்கு உடைபட்ட மதுமிதா!

இந்த வார தலைவருக்கான போட்டியில் சாண்டி, மதுமிதா மற்றும் முகேன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Web Desk | news18
Updated: August 2, 2019, 4:27 PM IST
பிக்பாஸ்: தலைவர் பதவிக்காக மூக்கு உடைபட்ட மதுமிதா!
மதுமிதாவிற்கு முதலுதவி செய்யும் சக போட்டியாளர்கள்
Web Desk | news18
Updated: August 2, 2019, 4:27 PM IST
பிக்பாஸ் வீட்டில் அடுத்தவார தலைவருக்கான போட்டியின் போது மதுமிதாவிற்கு காயமடைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி தொடங்கியது பிக்பாஸ் 3-வது சீசன். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 39 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் தலைவராக இருக்கும் நபரை அந்த வாரம் எலிமினேஷன் செய்வதற்காக நாமினேட் செய்ய முடியாது என்பது சட்டம். அதனால் ஒவ்வொரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டில் தலைவராக விருப்பம் தெரிவிப்பர்.


அதனை தொடர்ந்து வீட்டில் தலைவராக விரும்பும் நபர்களுக்காக போட்டி ஒன்று நடைபெறும். அந்த போட்டியில் வெற்றி பெருபவர்களே அந்த வாரம் தலைவராக இருப்பார்.

Also read... பிக்பாஸ்: நேரடியாக மோதிக்கொள்ளும் சேரன்... சரவணன்...!

இந்த பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக வனிதா விஜயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அபிராமி, மோகன் வைத்யா, ரேஷ்மா மற்றும் தர்ஷன் ஆகியோர் தலைவராக இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Loading...

இந்நிலையில் இந்த வார தலைவருக்கான போட்டியில் சாண்டி, மதுமிதா மற்றும் முகேன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அப்போட்டியின் போது மதுமிதா முகேனால் கீழு விழுகிறார். அதனால் மதுமிதாவிற்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வருகிறது. உடனே வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்கள் மதுமிதாவிற்கு முதலுவதி செய்யும் புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Also see...

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...