நாகினி சீரியலின் 5-ம் பாகம் ரெடி - கலர்ஸ் தமிழில் ‘வந்தது நீயா’ வந்தாச்சு!

வந்தது நீயா சீரியல்

புகழ்பெற்ற நாகினி தொடரின் 5-வது பாகமாக ‘வந்தது நீயா’ சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

 • Share this:
  புகழ்பெற்ற நாகினி தொடரின் 5-வது பாகமாக ‘வந்தது நீயா’ சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

  தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், வியப்பூட்டும் ஃபேண்டஸி கதை தொடரான நாகினி நெடுந்தொடருக்காக லட்சக்கணக்கான ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது. அந்த வகையில் நாகினி 5-ன் தொடர்ச்சியாக ‘வந்தது நீயா’ என்ற தொடரை ஒளிபரப்பவிருக்கிறது.

  5th part of the famous Nagini series Vanthathu Neeya will be telecast on Colors Tamil TV

  பாலாஜி டெலிஃபிலிம்ஸின் ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளிவரும் இந்நொடுந்தொடர், நாகினியின் அபூர்வமான உலகத்தை நமக்கு மீண்டும் உயிரோட்டமாக வழங்கவிருக்கிறது. மசோரி என்ற நவீன நகரத்தில் நடைபெறுகின்ற இந்த நிகழ்வுகள் இதற்கு முன்பு பார்த்திராக அளவுக்கு அதிக மர்மத்தையும், திடுக்கிடும் நிகழ்வுகளையும், அற்புதமான கதை பின்னணியையும் கொண்டு பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்வது நிச்சயம். 2021 ஏப்ரல் 3 ஆம் தேதி, தொடங்குகின்ற “வந்தது நீயா” நெடுந்தொடரானது, கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒவ்வொரு வாரமும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

  5th part of the famous Nagini series Vanthathu Neeya will be telecast on Colors Tamil TV

  நாகினி மற்றும் கழுகிற்கு இடையே நடைபெறும் ஒரு விரும்பத்தகாத திருமணத்திற்குப் பிறகு இரத்தம் குடிக்கும் ஒரு காட்டேரியாக அளவற்ற சக்தியினை கொண்டிருக்கும் ரேஹன் சிங்காரம் (ஹர்ஷ் ராஜ்புத் நடிப்பில்) என்ற குழந்தை அவர்களுக்குப் பிறக்குமாறு சபிக்கப்படுகின்றனர். இவனைச் சுற்றி கலகமும், குழப்பமும், அழிவும் ஏற்படும் என்ற சாபமும் ஆட்டிப்படைக்கிறது. அவனது சக்தியின் மூல ஆதாரத்தை அடையாளம் காண முயற்சிக்கும் ரேஹன், அவனது வாழ்க்கையில் பாதி தேவதை மற்றும் பாதி மானுட நபராக திகழும் பிரியா (கிருஷ்ணா முகர்ஜி நடிப்பில்) சந்திக்க நேரிடுகிறது. எனினும், அவளது ஆற்றல் பற்றி அறியாதவனாகவே ரேஹன் இருக்கிறான். அடுத்து என்ன நடக்கும் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லவிருக்கிறார்கள் வந்தது நீயா குழுவினர்.

  வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மாலை 6.30 வரை ஒளிபரப்பாகும் வந்தது நீயா நெடுந்தொடரை மறவாமல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடிஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: