நடிகர் பப்லு பிரித்விராஜ் 23 வயது மலேசிய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் பப்லு ப்ரித்விராஜ். 1971-ம் ஆண்டு நான்கு சுவர்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொடர்ந்து சிவாஜி, ரஜினி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதோடு பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
குறிப்பாக அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா படத்தில் பப்லுவின் வில்லத்தனம் பரவலாக பேசப்பட்டது. பின்னர் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ரமணி வெர்சஸ் ரமணி, மர்ம தேசம், அரசி, ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள பப்லு பிரித்விராஜ், தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’கண்ணான கண்ணே’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
1994-ம் ஆண்டு பீனா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஆஹத் என்ற 27 வயது மகன் இருக்கிறார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆஹத்தை சிறப்பான முறையில் கவனித்து வரும் பப்லு, பல மேடைகளில் மகனைப் பற்றி உணர்ச்சிவசப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு விஜய்யின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்... உறுதிப்படுத்திய தமன்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்ணை 56 வயதாகும் பப்லு இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மலேசியாவில் தொழில் தொடங்க அந்த பெண் பப்லுவுக்கு உதவி புரிந்ததாகவும், பின்னர் இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.