• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்ற ஷிவாங்கி - ரசிகர்களுக்கு நன்றி!

இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்ற ஷிவாங்கி - ரசிகர்களுக்கு நன்றி!

சிவாங்கி

சிவாங்கி

சிவகார்த்தியனின் டான் என்ற திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெற்று தற்போது அதில் பிஸியாக இருக்கிறார். மேலும் நடிகர் அஸ்வினின் ஆல்பம் பாடல் ஒன்றிலும் ஷிவாங்கி பாடியுள்ளார்.

  • Share this:
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஷிவாங்கியின் தந்தை கிருஷ்ணகுமார் இசைக் கலைஞராவார். இவரது தாய் பின்னி பின்னணிப் பாடகியாவாவார். சிவாங்கியின் பெற்றோர் இருவரும் கலைமாமணி விருது பெற்றுள்ளார்கள். சிறுவயதில் இருந்தே இசை மீது ஆர்வம் கொண்ட ஷிவாங்கி, விஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் 7 சீசனில் கலந்து கொண்டார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் "குக்கு வித் கோமாளி" சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டதன் மூலம் எண்ணற்ற ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அவரின் குறும்புத்தனமாக செயல்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட பின் 2021ம் ஆண்டு பிளாக் ஷீப் டிஜிட்டல் விருது நிகழ்ச்சியில் சிறந்த பெண் பொழுதுபோக்கு நட்சத்திரத்திற்கான விருது, பிஹைண்ட் வுட்ஸ் கோல்டு ஐகான் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரத்திற்கான விருது மற்றும் விஜய் தொலைக்காட்சி விருதுகள் நிகழ்ச்சியில் அஸ்வின்குமாருடன் தொலைக்காட்சியில் பிரபலமான ஜோடிக்கான விருது ஆகிய மூன்று விருதுகளை இதுவரை பெற்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் சிவகார்த்தியனின் டான் என்ற திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெற்று தற்போது அதில் பிஸியாக இருக்கிறார். மேலும் நடிகர் அஸ்வினின் ஆல்பம் பாடல் ஒன்றிலும் ஷிவாங்கி பாடியுள்ளார். இதனிடையே இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நிறைவடைந்த சில நாட்களிலேயே இன்ஸ்டகிராமல் ஒரு மில்லியன் பாலோயர்ஸ்களை பெற்ற நிலையில் தற்போது சுமார் 4 மில்லியன் பேர் ஷிவாங்கியை பாலோ செய்து வருகிறார்கள்.

இதனால் உற்சாகமாக இருக்கும் ஷிவாங்கி இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து நன்றி கூறி ஒரு போஸ்ட் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார், அதில், 4 மில்லியன் பேர் என்னை பின்தொடர்வதை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. கடவும் மற்றும் எனது ரசிகர்களுக்கு நன்றி. இதில் என்னை விட நீங்கள் தான் மகிழ்ச்சியாக இருப்பதை நான் பார்க்கமுடிகிறது என உணர்ச்சிபூர்வமாக நன்றி கூறியுள்ளார்.

Also read... புதிய வெப் சீரிஸில் நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை!

மேலும் ரசிகர்களுடன் லைவில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஷிவாங்கிபதில் அளித்துள்ளார். ரசிகர் ஒரு பிக் பாஸ் சீசன்5ல் பங்கேற்பீர்களா? என கேள்வியை எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த ஷிவாங்கி, தற்போது வரவுள்ள பிக் பாஸ் சீசனில் நான் பங்கேற்கவில்லை, அந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பது எனக்கு கடினமாக தோன்றுகிறது என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: