விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி எந்த அளவிற்கு ஃபேமஸ் என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. மக்களின் ஏகபோகமான வரவேற்பின் விளைவாக வெற்றிகரமான சீசன் 1 மற்றும் சீசன் 2-ஐ தொடர்ந்து தற்போது குக்கு வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் பாரதி கண்ணம்மா சீரியலின் பழைய கதாநாயகி ரோஷினி, நடிகர் கருணாஸின் மனைவியும், பாடகியுமான கிரேஸ் கருணாஸ், நடிகை ஸ்ருதி மற்றும் அம்மு அபிராமி உள்ளிட்ட பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்டு ஷோவின் ஆஸ்தான கோமாளிகளுடன் சேர்ந்து அசத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியானது மக்களுக்கு 'போர்' அடித்துவிட கூடாது என்கிற எண்ணத்தின் கீழ் மற்றும் கொஞ்சம் புதுமையை சேர்க்கும் முனைப்பின் கீழ் "நீங்களும் ஆகலாம் கோமாளி" என்கிற போட்டி அறிவிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பின் கீழ் குக்கு வித் கோமாளி ரசிகர்கள் அவர்களது சொந்த நகைச்சுவை வீடியோக்களை பதிவு செய்து விஜய் டிவிக்கு அனுப்ப வேண்டும். அதன் வழியாக தேர்வு செய்யப்படுபவர்கள் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து "நீங்களும் ஆகலாம் கோமாளி" போட்டியில் வென்று, மக்களின் பிரதிநிதியாக மூன்று பேர் கோமாளிகளாக தேர்வு செய்யப்பட்டு சீசன் 3 நிகழ்ச்சிக்குள் நுழைந்து உள்ளனர். இது சார்ந்த ப்ரோமோ வீடியோ ஒன்றையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
வெளியான வீடியோவில் "சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டவர்கள்" என்று கூறி நிகழ்ச்சியின் ஆங்கர் ரக்ஷன் மூன்று புதிய கோமாளிகளை அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த மூவரில் யூட்யூப் பிரபலமான ராஜ் பிரியனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள இருவரில் ஒருவர் அச்சு அசல் ஷிவாங்கியை போலவே இருக்க, மற்றொருவர் பாலாவின் ஜெராக்ஸ் காப்பி போலவே இருக்கிறார்.
Also Read : மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் எச்சரிக்கை
நிகழ்ச்சிக்குள் நுழைந்த வேகத்தில் புதிய கோமாளிகள் தத்தம் பெர்ஃபார்மென்ஸைகளை கட்டவிழ்த்து விட, வழக்கம் போல குக்கு வித் கோமாளி ஷோவின் எடிட்டர்கள் கவுண்டமணியின் கவுன்டர் டயலாக்குகளை உள்ளே விட்டு குபீர் சிரிப்புகளுக்கு வழிவகுத்துள்ளனர்.
எல்லாவற்றை விடவும் ஹைலைட் ஆன "சம்பவம்" என்னவென்றால், ராஜ் பிரியன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளே வருகையில் மணிமேகலையை எதேர்சையாக கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறார். உடனே மணிமேகலை " என்ன வணக்கம் கூட சொல்லாமல் போறான்! இவனை என்ன செய்யலாம்?" என்று கூறி ராஜ் பிரியனை குரூரமாக பார்க்கிறார்.
அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் - ஏற்கனவே ஆங்கரிங் வேலை போயிடுச்சு.. இப்போ கோமாளி வேலையும் போயிடும் போலயே என்கிற டாபிக்கில் - ரக்ஷனும், அம்மு அபிராமியும் மணிமேகலையை கலாய்த்து தள்ளுகிறார்கள்.
Also Read : கவின் உடன் பிரேக்-அப் ஆக இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த லாஸ்லியா!
ஒருபக்கம் சுனிதா, "யாரெல்லாம் இந்த போட்டியின் விளம்பரத்தில் நடித்தார்களோ அவர்களை மட்டும் மாற்றுங்கள்" என்று மணிமேகலையை குறிவைக்க, மறுபக்கம் புதிதாக வந்த பத்மபிரியா என்கிற கோமாளி "உங்க கார் ட்ரைவர் வெளியே வெயிட் பண்றாரு" என்று மணிமேகலையிடம் கூற அந்த இடமே கலகலத்து போகிறது; அதோடு ப்ரோமோ வீடியோவும் முடிவடைகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment, Vijay tv