தனித்தீவில் 100 நாள்கள் - பிக் பாஸுக்கு போட்டியாக முன்னணி தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி

பிக்பாஸ் - கமல்

தென்னாப்பிரிக்கா அருகே இதற்கென ஒரு தனித்தீவை அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீஸன்களை கடந்து 5 வது சீஸனுக்கு தயாராகி வருகிறது. தமிழில் கமல், மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான் கான் என ஒவ்வொரு மொழியிலும் ஒரு சூப்பர் ஸ்டார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். இந்நிலையில், பிக் பாஸுக்கு போட்டியாக அதைவிட சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றுக்கு ஸீ தொலைக்காட்சி தயாராகிறது.

  வெளிநாடுகளில் சர்வைவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலம். ஆளில்லாத தனித்தீவில் போட்டியாளர்களை தங்க வைத்து, அவர்களுக்கு விதவிதமான டாஸ்குகள் அளிப்பார்கள். 100 நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக தாக்குப் பிடிக்கும் போட்டியாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். பெரும் பரிசுத் தொகை அவருக்கு வழங்கப்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்க ஸீ நெட்வொர்க் அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் இதற்கான பணிகளில் இறங்க உள்ளனர். தென்னாப்பிரிக்கா அருகே இதற்கென ஒரு தனித்தீவை அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மும்பையின் பிரபல தயாரிப்பு நிறுவனத்தினருடன் இணைந்து ஸீ இந்நிகழ்ச்சியை தயாரிக்கிறது.

  பிக் பாஸ் எப்படி இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட முக்கிய மொழிகளிலும் ஒளிபரப்பாகிறதோ, அதேபோல் இந்த நிகழ்ச்சியையும் முக்கியமான அனைத்து மொழிகளிலும் உருவாக்குகின்றனர். தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: