தாண்டவ் வெப் சீரிஸ் பரபரப்பு அடங்குவதற்குள் மிர்சாபூர் வெப் சீரிஸுக்கு கிளம்பிய எதிர்ப்பு
டந்த ஜனவரி 16ம் தேதியன்று அமேசான் பிரைமில் வெளியான தாண்டவ் வெப் சீரிஸில் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மிர்சாபூர்
- News18 Tamil
- Last Updated: January 21, 2021, 3:53 PM IST
இந்து மத கடவுள்களை அவமதிப்பதாக தாண்டவ் வெப் சீரிஸுக்கு எதிராக எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மிர்சாபூர் எனும் வெப் சீரிஸுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
இந்து மத கடவுள்களை அவமதிக்கும் விதமாக படமாக்கப்பட்டிருப்பதாக கடந்த ஒரு வாரமாக தாண்டவ் வெப் சீரிஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஜனவரி 16ம் தேதியன்று அமேசான் பிரைமில் வெளியான அந்த வெப் சீரிஸில் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்து மத கடவுள்களை அவமதிக்கும் விதமாக காட்சிகளும், வசனங்களும் அமைக்கப்பட்டிருப்பதாக போராட்டங்கள் வெடித்தன. அத்தொடரை தடை செய்ய வேண்டும் எனவும் கோரினர்.
இந்த பிரச்னை தொடர்பாக தாண்டவ் படத்தின் தயாரிப்பாளர் அலி அப்பாஸ் மன்னிப்பு கோரிய போதிலும் அத்தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் மீது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள காவல்நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து லக்னோவில் இருந்து காவல்துறை சிறப்புப்படை ஒன்று மும்பை விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் படத்தில் இந்து மத கடவுள்களை அவமதிக்கும் விதமான 2 காட்களை படக்குழு நீக்கியது. இதன் மூலம் தாண்டவ் மீதான எதிர்ப்பு ஓரளவு குறையத் தொடங்கியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமேசான் பிரைமில் வெளியான ‘மிர்சாபூர்’ என்ற வெப் சீரிஸ் மீது அடுத்த புகார் எழுந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மிர்சாபூர் என்ற நகரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸில் மிர்சாபூரின் இமேஜை கெடுக்கும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக அத்தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேலும் ஒரு சிறப்பு காவல்படை மும்பைக்கு விரைந்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளரிடமும், இயக்குனர், நடிகர்களிடமும் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.
இந்து மத கடவுள்களை அவமதிக்கும் விதமாக படமாக்கப்பட்டிருப்பதாக கடந்த ஒரு வாரமாக தாண்டவ் வெப் சீரிஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஜனவரி 16ம் தேதியன்று அமேசான் பிரைமில் வெளியான அந்த வெப் சீரிஸில் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்து மத கடவுள்களை அவமதிக்கும் விதமாக காட்சிகளும், வசனங்களும் அமைக்கப்பட்டிருப்பதாக போராட்டங்கள் வெடித்தன. அத்தொடரை தடை செய்ய வேண்டும் எனவும் கோரினர்.
இந்த பிரச்னை தொடர்பாக தாண்டவ் படத்தின் தயாரிப்பாளர் அலி அப்பாஸ் மன்னிப்பு கோரிய போதிலும் அத்தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் மீது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள காவல்நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து லக்னோவில் இருந்து காவல்துறை சிறப்புப்படை ஒன்று மும்பை விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளது.