கொரோனா உலகளாவிய பிரச்னையாக இருக்கும் போது ஜோதிகாவின் கருத்து விளம்பரத்திற்குத் தான் உதவும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நாலாட்டின்புதூர், வானரமுட்டி, கழுகுமலை, செட்டிகுறிச்சி, கயத்தார், கடம்பூர் உள்ளிட்ட பகுதியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தனது சொந்த செலவில் தூய்மைபணியாளர்கள், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 1300க்கும் மேற்பட்டோருக்கு அரசி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில், “எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. சினிமாவில் பேசுவதைப் போன்று பேசி வருகிறார். உலக நாடுகளே கண்டிராத பேரிடராக கொரோனா தொற்று உள்ளது.
2-ம் உலக போரை விட பாதிப்பு அதிகம். அரசியலாக மேதாவியாக பேசுவது சரியா என்பதை அவருடைய எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன். உலக வல்லரசு நாடுகள் கொரோனாவை சமாளிக்க முடியாமல் திணறி வரும் போது இந்தியா சிறப்பாக கையாண்டு வருகிறது.
தமிழகத்திலும் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். நேரம் பார்க்காமல் பணியாற்றும் முதல்வர் என்று மக்கள் பாராட்டி வருகின்றனர். 24 மணி நேரமும் முதல்வர் தன்னையும் ஈடுபடுத்தி, அவர் கீழ் இருக்கும் அனைத்து துறைகளையும் பணியில் ஈடுபடுத்தி வருவது மட்டுமின்றி பாராட்டியும் வருகின்றார்.
நடிகர் கமல்ஹாசன் பால்கனியிலிருந்து பேசும் பழக்கம் உடையவர். அவர் மக்களை பால்கனியிலிருந்து பார்க்கிறார். நாங்கள் மக்களிடமிருந்து பால்கனியை பார்க்கிறோம். எங்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இந்த நேரத்தில் அரசியல் கருத்துக்கள் சரியாக இருக்காது” என்றார்
நடிகை ஜோதிகா பேச்சு தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து கேட்டதற்கு, “இதுவும் தற்போது விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. கொரோனா உலகளாவிய பிரச்னையாக இருக்கும் போது இவர்களுடைய (ஜோதிகா) கருத்து விளம்பரத்திற்கு தான் உதவும். இந்த நேரத்தில் இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்பது எங்கள் கருத்து” என்றார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.