தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சி: அரசாணை வெளியீடு

மாதிரிப்படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் 3 நாட்களுக்கு கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

  தீபாவளி நாள் மட்டுமன்றி, கூடுதலாக சில நாட்களிலும் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு, வரும் 7,8, மற்றும் 9- ம் தேதிகளில் கூடுதலாக ஒரு காட்சியை திரையிட அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  அரசு விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சி திரையிட ஏற்கனவே சட்டத்தில் வழிவகை உள்ளதால், தீபாவளி நாளில் ஏற்கனவே கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி உண்டு. தற்போது அதற்கு அடுத்து வரும் மூன்று நாட்களிலும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பெரும்பாலான திரையரங்குகளில் விஜய்யின் ’சர்கார்’ திரையிடப்படுகிறது. இந்த நிலையில் அரசின் இந்த அரசாணை சர்கார் படக்குழுவுக்கு சாதகமாகவே அமையும்.

  ஸ்டாலினும், தினகரனும் ஒரே விமானத்தில் செல்வது தவறா? - துரைமுருகன் - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published: