தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2019 - 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடத்துவதற்கான முடிவை சங்கத்தின் 99 வது பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஜூலை 14-ம் தேதி இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இயக்குநர் பாரதிராஜா சங்கத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் அனைத்து பொறுப்புகளுக்கும் அதாவது, இரண்டு துணை தலைவர்கள் , 1 பொதுச் செயலாளர் , 4 இணை செயலாளர்கள் , 1 பொருளாளர் , 12 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் விண்ணப்பம் வழங்கப்பட்டது. 29 -ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது . ஜூலை 2 -ம் தேதி இறுதி பட்டியல் வெளியாகும் என அறிவிக்கபட்டது.
ஆனால் நேற்றைய தினம் ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து சங்கத்தின் 100-வது அவசரபொதுகுழு வருகின்ற 8 - ம் தேதி கூட்டப்பட்டு ஜூலை 21 -ம் தேதி சங்கத்திற்கான தேர்தல் தேதியாக அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தில் 3000 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 2400 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பார்க்க: காப்பியடித்து மாட்டிக்கொண்ட இசையமைப்பாளர்கள்!
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.