Home /News /entertainment /

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதியுதவி!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதியுதவி!

முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி

சர்வதேச திரைப்பட விழாவிற்காக ரூ.75 லட்சம் காசோலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

17-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிசம்பர் மாதம் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவினை தமிழக அரசின் ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் நடத்த இருக்கிறது.

இவ்விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்கான காலோலையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மனோபாலா, பூர்ணிமா பாக்கியராஜ், மோகன் உள்ளிட்டோரிடம் வழங்கினார். அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், பல நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான படங்கள் திரைடயிடப்பட்டன. அதேபோல், இந்த ஆண்டும் இவ்விழாவிற்கு தேர்வாகியுள்ள திரைப்படங்கள் சென்னையில் இருக்கக்கூடிய முக்கிய திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளன.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Chennai Film Festival

அடுத்த செய்தி