• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா" - ரஜினிக்கு தமிழிசை வாழ்த்து!

"படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா" - ரஜினிக்கு தமிழிசை வாழ்த்து!

ரஜினிகாந்த் | தமிழிசை

ரஜினிகாந்த் | தமிழிசை

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி என்கிற சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. இதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்துள்ளார்.

    இதையடுத்து கோவா திரைப்பட விழாவில் தன்னை கவுரவப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நடிகர் ரஜினிகாந்துக்கு ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது, “அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என வாழ்த்துகிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.



    வீடியோ பார்க்க: யார் இந்த சிங்கப்பெண்கள்?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: