ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அந்த சீரியல் நடிகைக்கு பல நபர்களுடன் தொடர்பு இருக்கு - வழக்கறிஞர் தகவல்

அந்த சீரியல் நடிகைக்கு பல நபர்களுடன் தொடர்பு இருக்கு - வழக்கறிஞர் தகவல்

 இளைஞர் ராஜேஷ் - குற்றம்சாட்டப்பட்டவர்

இளைஞர் ராஜேஷ் - குற்றம்சாட்டப்பட்டவர்

சின்னத்திரை நடிகை ராஜேஷ் என்பவரை பழி வாங்குவதற்காக அவர் மீது குற்றம்சுமத்தியிருப்பதாக வழக்கறிஞர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னையில் கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த சின்னத்திரை நடிகை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் 11 திரைப்படங்கள் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாக நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது தோழி மூலம் அறிமுகமான கீழகட்டளையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிவித்துள்ளார். நிகழ்ச்சிகளை எடுத்து நடத்தும் தொழில் செய்து வரும் ராஜேஷ்,விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை காட்டி பாலியல் ரீதியாக உடலுறவு கொண்டதாகவும் அதன் பின் திருமண தேதி நெருங்க நெருங்க விருப்பம் இல்லாதது போல் நடந்து கொண்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து ராஜேஷிடம் கேட்கும் போது தான், உடலுறவு கொள்ளவே திருமண நாடகம் நடத்தியது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் தொடர்ந்து தன்னுடன் எடுத்து வைத்திருந்த ஆபாச படங்களை வைத்து மிரட்டி சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் அளவிற்கு தன்னிடம் இருந்து பணம் பறித்ததாகவும், 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வதாகவும் ராஜேஷ் கூறியதாக சின்னத்திரை நடிகை புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து , நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. அதனடிப்படையில் ராஜேஷ் குமார் மீது பாலியல் வன்கொடுமை செய்தது,மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவின்கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜேஷ் தரப்பு வழக்கறிஞர் பத்மநாபன் நம்மிடம் பேசிய போது, நடிகையும் ராஜேஷும் காதலித்து திருமணம் வரை சென்றது உண்மைதான். ஆனால் நடிகைக்கு பல நபர்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்த ராஜேஷ் இதுகுறித்து ராதிகாவிடம் கேட்டுள்ளார். அதற்குதான் இப்படி தான் இருப்பேன் எனவும் இதனை கண்டுகொள்ளாமல் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் ராஜேஷுக்கு தொடர்ந்து மிரட்டல் கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.

மேலும் ராஜேஷிடம் லட்சக்கணக்கில் ராதிகா பணம் வாங்கிக் கொண்டு, திரும்பத் தராமல் ராஜேஷை ஏமாற்றி உள்ளதாகவும், அதனால் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராஜேஷ் புகார் அளித்ததாக கூறும் வழக்கறிஞர் பத்மநாபன், அந்த புகாரின் பேரில் நடிகையிடம் விசாரணை நடத்திய போலீசார் இனி ராஜேஷிடம் பிரச்னை வைத்துக்கொள்ளக் கூடாது என எச்சரித்து அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

மேலும் ராதிகா பல நபர்களுடன் தொடர்பில் இருந்ததற்கு அவர் பேசிய ஆடியோ, வீடியோ ஆதாரமாக இருப்பதாகவும் ராதிகா திட்டமிட்டு பழி வாங்குவதற்காகவே இதுபோல் செய்துள்ளதாகவும் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்

Published by:Sheik Hanifah
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், TV Serial