• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழக மாணவர்கள் குறித்து நான் அப்படி பேசவில்லை - பிரகாஷ்ராஜ்

தமிழக மாணவர்கள் குறித்து நான் அப்படி பேசவில்லை - பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் - நடிகர்

பிரகாஷ்ராஜ் - நடிகர்

டெல்லியிலுள்ள பள்ளிகளில் தமிழ் குழந்தைகள் கூட படிக்கிறார்கள். அதேபோல் மற்றமொழி குழந்தைகள் கூட படிக்கிறார்கள். அவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்க வரும்போது கூட இத்தகைய பிரச்னையை சந்திக்கலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழக மாணவர்கள் குறித்த தனது கருத்து மோசமான உள்நோக்கத்துடன் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடந்த மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’கடந்த 7 ஆண்டுகளில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று விட்டன. ஆம் ஆத்மி போன்ற கட்சிகளால் தான் நாட்டைக் காப்பாற்ற முடியும்” என்றார்.



அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்வதால் டெல்லி மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதாக அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியது குறித்து செய்தியாளர்கள் பிரகாஷ்ராஜிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ், “தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். டெல்லி பல்கலைக்கழகம் சி.பி.எஸ்.இ முறையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள அரசும் கல்லூரிகளுக்கு கிரேஸ் மதிப்பெண்கள் வழங்குகின்றன. ஆனால் பாண்டிச்சேரிக்கும், டெல்லிக்கும் ஒதுக்கீடு கிடையாது. இதுதான் பிரச்னை.



டெல்லியிலுள்ள பள்ளிகளில் தமிழ் குழந்தைகள் கூட படிக்கிறார்கள். அதேபோல் மற்றமொழி குழந்தைகள் கூட படிக்கிறார்கள். அவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்க வரும்போது கூட இத்தகைய பிரச்னையை சந்திக்கலாம். இதுபோன்ற பிரச்னைகளால் தான் டெல்லிக்கு மாநில அந்தஸ்து தேவை. அர்விந்த் கெஜ்ரிவால் பேசும்போது உண்மையில் பிழை நடந்திருக்கலாம். அவர் தவறாக கூறவில்லை. தனது வேதனையை வெளிப்படுத்தினார்” என்று கூறினார்.

இதனிடையே பிரகாஷ்ராஜின் இந்த கருத்து தமிழக மாணவர்களுக்கு எதிராக உள்ளதாக சமூகவலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன.

பிரகாஷ்ராஜின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவரது பூர்விகம் கர்நாடகாதான். தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் காரணத்தினால் தான் அவர்கள் திறமைக்காக வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன” என்று கூறினார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியது குறித்து ட்விட்டரில் தயாரிப்பாளர் தனஞ்செயனும் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த நடிகர் பிரகாஷ்ராஜ், “தமிழக மாணவர்கள் குறித்த என்னுடைய கருத்து மோசமான உள்நோக்கத்துடன் திரித்துக் கூறப்பட்டுள்ளது” என்று கூறினார்.

திருக்குறளை பின்னோக்கி எழுதி அசத்தும் கோவில்பட்டி மாணவி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: