• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Tamil Serials: வெளி மாநிலங்களை நோக்கி படையெடுக்கும் தமிழ் சீரியல்கள்..!

Tamil Serials: வெளி மாநிலங்களை நோக்கி படையெடுக்கும் தமிழ் சீரியல்கள்..!

தமிழ் சீரியல்கள்

தமிழ் சீரியல்கள்

தயாரிப்பு நிறுனங்கள் தங்கள் சீரியலை, படப்பிடிப்பிற்கு அனுமதியுள்ள வேறு மாநிலங்களுக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றன.

  • Share this:
    கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சிக்கல் என்னவென்றால் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டால், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் துவங்கிக்கொள்ளாலாம்.

    ஆனால் சின்னத்திரை படப்பிடிப்புகள் அப்படியில்லை. சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். முதல் அலையின்போது பெரும்பாலான சீரியல்கள் மீண்டும் துவக்கத்தில் இருந்து ஒளிபரப்பி நிலமையை சமாளித்தன. முதல் அலையிலேயே சுதாரித்துக்கொண்ட தயாரிப்பு நிறுவனங்கள், வேக வேகமாகப் படப்பிடிப்பை நடத்தி அதிக காட்சிகளைப் படமாக்கி தற்போது இரண்டாவது அலையில் அதனை வைத்து சமாளித்து வருகின்றன.

    Also Read:   PhonePe யூசர்கள் இனி யுபிஐ வழியாக வாலட்டை ஆட்டோ டாப்-அப் செய்யலாம்!

    ஒரு சில தயாரிப்பு நிறுனங்கள் தங்கள் சீரியலை, படப்பிடிப்பிற்கு அனுமதியுள்ள வேறு மாநிலங்களுக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். குறிப்பாகத் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெற்று வருகிறது.

    அந்தத் தொடரின் நடிகர்,  நடிகைகள் அங்கேயே தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வது உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளைக் கடைபிடித்து படப்பிடிப்புகள் நடைபெறுகிறது. படப்பிடிப்பு தளங்களில் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவை வைரலாகி வருகிறது.

    Also Read:  இந்தியாவில் அசுர வளர்ச்சியை நோக்கி Gaming துறை! குவியும் முதலீடுகள்

    தெலங்கானாவில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஏராளமான தமிழ் படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. நடிகர் அஜித்தின் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களின் படப்பிடிப்பும் அங்கே தான் நடைபெற்றது. தற்போது ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படப்பிடிப்பும் அங்கே தான் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெளியில் செட் போட்டுப் படமாக்குவது, ரசிகர்களின் தொல்லை என பெரிய நடிகர்கள் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்குவதையே விரும்புகின்றனராம். ஒரு முழு படப்பிடிப்பையும் அங்கேயே நடத்தி முடிக்கும் அளவுக்கு அங்கே செட் வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது.

    முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையில் திரைப்பட மற்றும் சீரியல் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால், நடிகர்களிடையே பதற்றம் காணப்பட்டது. சிலர் நடிக்க முன் வராததால் அவர்களுக்குப் பதிலாக வேறு நடிகர்களை வைத்து படமாக்கி வருகின்றனர். ஒரு சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களே நடிக்க முன்வராததால் கதையின் போக்கை மாற்றியமைத்து படமாக்கி வருகின்றனர். ஆனாலும் முதல் அலையைக் காட்டிலும் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதால் நடிகர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாக விரைவில் தமிழகத்திலும் படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தினால் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் விரைவில் நிலைமை சீரடைய வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: