Home /News /entertainment /

தெலுங்கு சீரியலில் ஜோடி சேரும் தமிழ் சீரியல் பிரபலங்கள்...குவியும் வாழ்த்துக்கள்!

தெலுங்கு சீரியலில் ஜோடி சேரும் தமிழ் சீரியல் பிரபலங்கள்...குவியும் வாழ்த்துக்கள்!

‘குண்டம்மா கதா’ என்ற சீரியல்  புரோமோ வீடியோ

‘குண்டம்மா கதா’ என்ற சீரியல்  புரோமோ வீடியோ

Zee Telugu | தமிழ் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமான நடிகர்கள் தற்போது தெலுங்கு சீரியலில் ஜோடி சேர்ந்துள்ளனர்.

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கள் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் தான் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

இது தமிழுக்கு மட்டுமல்ல பிற மொழிக்கும் பொருந்தும். எனவே தான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எவ்வித மொழி பாகுபாடும் இன்றி சின்னத்திரையின் ஹிட் சீரியல் நடிகர், நடிகைகள் பிற மொழிகளிலும் நடித்து வருகின்றனர். அப்படி தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மூலமாக ஹிட்டான நடிகரும், நடிகையும் தெலுங்கு சீரியல் ஒன்றில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

சன் டி.வி.யில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக அதே டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சந்திரலேகா. கிட்டத்தட்ட 2500-க்கும் அதிகமான எபிசோட்களை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த சீரியலில் நடித்து வந்த முன்னா என்கிற முனாப் ரஹ்மான் ஜெய் தனுஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜபார்வை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து சன் தொலைக்காட்சியை விட்டு விலகினார்.



 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)






 

விபத்தில் கண்களை இழக்கும் ஹீரோ ஒரு கிராமத்து பெண் மீது காதல் கொள்வதை மையமாக கொண்ட கதையில் நடித்து வந்தார். அதேபோல் சந்திரரேகா சீரியலில் தேவி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த வனிதா ஹரிஹரன் விலகிக்கொள்ளவே அவருக்கு பதிலாக ஹர்ஷாலா ஹனி என்பவர் நடித்து வருகிறார். கன்னடத்தில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை சீரியல்கள் மூலமாக கலக்கி வந்த ஹர்ஷாலா ஹனி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓவியா சீரியலில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார்.

Read More : நான் விஜய் டிவியை விட்டு போறன்..மா.கா.பா செயலால் கடுப்பான பிரியங்கா!


கன்னடத்தில் இவர் நானு மாட்டு நானு, சுக்கி, பிருங்கடா பென்னேரி, வரஸ்தாரா, சஞ்சு மாட்டு நானு, காவேரி, ரோபோ ஃபேமிலி, யாரே நீ மோகினி மற்றும் உகே உகே மாதேஸ்வரா போன்ற சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். தற்போது கன்னடத்தில் கன்னட சீரியல் எடியூர் ஸ்ரீ சித்தலிங்கேஸ்வரா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் பிரபலமான சந்திரலேகா சீரியலில் நடித்த முன்னா, ஹர்ஷாலா ஹனி இருவரும் தற்போது ஒன்றாக இணைந்து தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளனர். ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘குண்டம்மா கதா’ என்ற சீரியலில் ஜிம் ட்ரெயினராக முன்னாவும், கதாநாயகியாக ஹர்ஷாலா ஹனியும் நடித்துள்ளனர். இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஜீ தெலுங்கு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள புரோமோ வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

எப்படியோ சந்திரலேகா சீரியலில் ஜோடியாக இணைந்து நடிக்க முடியாத இருவரும் ஒருவழியாக தெலுங்கு சீரியலில் ஜோடி சேரப்போகிறார்கள் என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்தி வருகின்றனர்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Entertainment, Trending, Viral, Zee tamil

அடுத்த செய்தி