ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிம்புவை திருமணம் செய்து கொள்ள போகிறாரா சீரியல் நடிகை - சோஷியல் மீடியாவில் வைரலாகும் போஸ்ட்!

சிம்புவை திருமணம் செய்து கொள்ள போகிறாரா சீரியல் நடிகை - சோஷியல் மீடியாவில் வைரலாகும் போஸ்ட்!

சிம்பு

சிம்பு

Actor Simbu | தற்பொது சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. தற்போது இதற்கு விதை போட்டிருப்பவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. சிம்புவின் திருமணம் குறித்து இன்ஸ்டாவில் இவர் போட்ட பதிவு நெட்டிசன்கள் மற்றும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெள்ளித்திரையில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக குழந்தை பருவத்திலேயே அறிமுகமாகி, தனக்கென்று பெரும் ரசிகர் வட்டத்தை வைத்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது 39 வயதாகும் சிம்பு, இன்னும் பேச்சுலராகவே இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் சிம்பு, சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, தற்போது வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நயன்தாரா, ஹன்சிகா என்று பலரை காதலித்த தகவல் நாம் அனைவரும் அறிந்ததே. பல படங்களின் சறுக்கல்களுக்கு பிறகு சமீபத்திய மாநாடு திரைப்பட வெற்றி சிம்புவின் கேரியரை மறுபடியும் பிக்கப் செய்து கொடுத்தது.

எனினும் சிம்புவுக்கு இப்போது திருமணம் நடக்கும், அப்போது திருமணம் நடக்கும் என்று அவரது ரசிகர்களும் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். ஆனால் அவரது திருமண வாழ்வு எப்போது துவங்கும் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அவ்வப்போது சிம்புவின் திருமணம் குறித்து பரபரப்பான பேச்சுக்கள் எழுவதும், பின் அடங்கி போவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
 
View this post on Instagram

 

A post shared by Nidhi (@sreenidhi_)அந்த வகையில் தற்பொது சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. தற்போது இதற்கு விதை போட்டிருப்பவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சிம்புவின் திருமணம் குறித்து இன்ஸ்டாவில் போட்ட பதிவு நெட்டிசன்கள் மற்றும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

சமீபத்தில் நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாவில் விழா ஒன்றில் உணர்ச்சிவசப்பட்டு சிம்பு கண்கலங்கும் ஸ்டில் அடங்கிய மீம் இமேஜ் ஒன்றை ஷேர் செய்து "எல்லோருக்கும் ஒரு நாள் திருமணம் நடந்திருக்கும். நானும், எஸ்டிஆர்-ம் மட்டுமே எஞ்சியிருப்போம்" என்று இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார். உடனே இதனை பார்த்த நெட்டிசன்கள் பேசாமல் நீங்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாமே என்று தொடர்ந்து கேட்டு வந்தார்கள்.
 
View this post on Instagram

 

A post shared by Nidhi (@sreenidhi_)என்னடா இது நமக்கு வந்த சோதனை.! சிம்புவிடம் நம்மை கோர்த்து விடுகிறார்காளே என்றெண்ணி உடனே இப்படி சொல்லி விட்டார் நடிகை ஸ்ரீநிதி. "நல்லா தான் இருக்கும். ஆனா எனக்கு இப்போ ஆள் இருக்கே" என்று எமோஜியுடன் பதிவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார். மாநாடு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ள நடிகர் சிம்புவின் திருமண பேச்சுக்கள் மீண்டும் சோஷியல் மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காகி வரும் நிலையில், தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை சிம்பு விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Entertainment, Simbu, TV actress