ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சித்தி 2 சீரியலில் என்டிரி கொடுத்த புதிய நடிகை - இவர் யார் தெரியுமா?

சித்தி 2 சீரியலில் என்டிரி கொடுத்த புதிய நடிகை - இவர் யார் தெரியுமா?

சித்தி 2

சித்தி 2

முன்னணி நடிகர், நடிகைகள் விலகினாலும், புதிய நடிகர்களின் வரவுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

வெள்ளித்திரையில் அறிமுகமாக நட்சத்திரமாக ஜொலித்த நடிகை ராதிகா, தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 80 மற்றும் 90 -களில் படு பிஸியாக வெள்ளித்திரையில் நடித்த அவர், திடீரென சினத்திரை பக்கம் தனது கவனத்தை திருப்பினார். வெள்ளிதிரையில் கிடைத்த நட்சத்திர அந்தஸ்து, சின்னத்திரையிலும் கிடைத்தது. தொடர்ந்து வெற்றி சீரியல்களைக் கொடுத்து, சின்னத்திரையில் தனக்கென தனியொரு இடத்தை பிடித்து சிம்மாசனமிட்டார்.

சித்தி தொடர் முதல் சீரியலாக இருந்தாலும், 20 ஆண்டுகளாக அந்த சீரியல் மக்களின் நினைவில் நீங்கா சீரியலாகவே இருந்து வருகிறது. கொரோனா காரணமாக அந்த சீரியல் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டபோதும் நல்ல வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்தது. சித்தி சீரியலுக்குப் பிறகு வாணி ராணி, அண்ணாமலை பாக்யலட்சுமி, செல்லமே ஆகிய ஹிட் சீரியல்களிலும் நடித்தார். அடுத்தடுத்து ஹிட் சீரியல்களை கொடுத்த அதேநேரத்தில், ராடன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறினார்.

சித்தி சீரியலுக்கு மக்களிடையே இன்னும் வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்ட ராதிகா, சித்தி 2 சீரியலை தயாரித்தார். அந்த சீரியல் சன் டீவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை சீரியல்களின் சூட்டிங் பாதிக்கப்பட்டது. இதனால், சித்தி 2 சீரியல் படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தளர்வுகள் கொடுக்கப்பட்டவுன் சீரியல் சூட்டிங் ஆரம்பித்தபோது, சூழ்நிலை காரணமாக பல்வேறு நடிகர், நடிகைகள் சித்தி 2 சீரியலில் இருந்து விலகினார்.

நடிகை ராதிகாவும் சித்தி 2-வில் இருந்து விலகினார். அவர் ஏன் விலகினார்? எனத் தெரியவில்லை. முன்னணி நடிகர், நடிகைகள் விலகினாலும், புதிய நடிகர்களின் வரவுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. தற்போது இந்த சீரியலில் புது நடிகை ஒருவர் இணைந்துள்ளார். அவர் ஏற்கனவே சின்னத்திரை மற்றும் ராதிகாவின் சீரியல்களில் நடித்துள்ளார். அவர் வேறுயாருமில்லை, நடிகை நவ்யா சுவாமி. இவர் ஏற்கனவே வாணி ராணி சீரியலில் ராதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது, சித்தி 2 சீரியலிலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

அவர் நடிக்கும் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே நடித்த நடிகர்கள், நடிகைகள் சித்தி 2 சீரியலில் இருந்து விலகினாலும், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

மேலும், நவ்யா சுவாமியின் என்டிரி எப்படி இருக்கப்போகிறது என்பது இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. சித்தி - முதல் தொகுப்பு கிடைத்த வரவேற்புக்கு துளியும் குறைவில்லாமல் சித்தி 2 சீரியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ராதிகா உறுதியாக இருப்பதால், அதற்கான அனைத்து விஷயங்களிலும் துல்லியாக கவனம் செலுத்தி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Radhika sarathkumar, TV Serial