நடிகர் நட்டியின் புதிய சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பிரபல சீரியல் நடிகை!

அனன்யா மணி

தனது கனவை நனவாக்கி கொள்ளும் விதமாக தற்போது நடிகை அனன்யா மணிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது.

  • Share this:
தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் பணிபுரியும் மாடல், விஜே மற்றும் நடிகை அனன்யா மணி. 1997-ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று பிறந்த இவர் ஊட்டியில் வளர்ந்தார். சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார் நடிகை அனன்யா மணி. இதனிடையே கலர்ஸ் தமிழ் சேனலில் ஏப்ரல் 11, 2018 முதல் ஜூன் 28, 2019 வரை ஒளிபரப்பான "வந்தாள் ஸ்ரீதேவி" சீரியல் மூலம் முதன் முறையாக சின்னத்திரை நடிகையாக ரசிகர்களிடையே அறிமுகமானார் அனன்யா மணி. இந்த சீரியலில் முக்கிய வேடங்களில் நந்தன் லோகநாதன் மற்றும் லாஸ்யா நாகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

கலர்ஸ் தமிழில் அப்போது ஒளிபரப்பான சீரியல்களில் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் ரசிகர்களின் தனி வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் ஸ்ரீதேவி என்ற கேரக்டரில் ஹீரோயினாக தோன்றி ஏராளமான ரசிகர்களை தன் திறமை மற்றும் நடிப்பால் வசீகரித்தார் நடிகை அனன்யா மணி. இதனை அடுத்து இவருக்கு ரசிகர்கள் பெருகினர். இவருக்காகவே பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தனர். அந்த அளவுக்கு வந்தாள் ஸ்ரீதேவி மூலம் பிரபலமடைந்தார் நடிகை அனன்யா மணி. சின்னத்திரையில் கால் பதித்திருந்தாலும் வெள்ளித்திரையில் பெரிய முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்பதே இவரின் லட்சியமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கேற்ப பைரவா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுன் கல்லூரி தோழியாக சில காட்சிகளில் நடித்தார். இது தவிர நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த சங்கத்தமிழன் திரைப்படத்தில் பாக்யலட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை அனன்யா மணி. இதன் பிறகு வெள்ளித்திரையில் பெரிதாக வாய்ப்புகள் அமையாவிட்டாலும், எப்டியும் முன்னணி நடிகை ஆகியே தீருவது என்ற லட்சியத்தில் இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது ஷேர் செய்வார். மியூசிக் வீடியோ, ஆல்பம் சாங் என்று ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் வெள்ளித்திரை வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.

Also read... மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட 11 இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம்!

தனது கனவை நனவாக்கி கொள்ளும் விதமாக தற்போது நடிகை அனன்யா மணிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹாரூன் இயக்கத்தில், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடிக்கும் வெப் (WEB) என்ற திரைப்படத்தில் நடிகை அனன்யா மணி முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ட்விட்டரில் KSK Selva PRO என்பவர் இது தொடர்பான தகவலை ரீட்விட் செய்துள்ளார்.அந்த ட்விட்டில் நட்டியின் சைக்கோ த்ரில்லர் படமான WEB நடிகர்களுடன் நடிகை அனன்யா மணி இணைகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்த அனன்யா மணியின் ரசிகர்கள் படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வர வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: