ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’மெட்டி ஒலி’ புகழ் நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்

’மெட்டி ஒலி’ புகழ் நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்

நடிகர் விஜயராஜ்

நடிகர் விஜயராஜ்

பிரபல சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 43

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பிரபல சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 43

  கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமானவர் விஜயராஜ். இவர் திண்டுக்கல் மாவட்டம், பழனியை பூர்விகமாகக் கொண்டவர். மெட்டி ஒலி சீரியலைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் இவர் நடித்திருந்தார். மேலும் பிரபல தொலைக்காட்சித் தொடர்களான நாதஸ்வரம், கோலங்கள் ஆகியவற்றிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு திருமணமாகி 8 வயதில் ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

  இந்நிலையில் தீபாவளியை கொண்டாட தனது சொந்த ஊரான பழனிக்குச் சென்றுள்ளார். நேற்றிரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தாரையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலை சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

  பயணியுடன் ஓட்டுநர் சண்டையிட்டு கொண்டே பேருந்தை இயக்கியதால் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 15 பேர் உயிரிழப்பு - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: TV Serial Actor died