ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது ‘சர்கார்’ - அதிர்ச்சியில் படக்குழு

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது ‘சர்கார்’ - அதிர்ச்சியில் படக்குழு

சர்கார் போஸ்டர்| தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கம்

சர்கார் போஸ்டர்| தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சர்கார் படம் வெளியான சில மணி நேரங்களிலேய தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  சர்கார் படத்தை ஹெச்டி பிரிண்டாக இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. தமிழ் ராக்கர்ஸின் இந்த சவாலை முறியடிப்போம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் சார்கார் தமிழ்நாட்டில் வெளியாக உள்ளது. அத்திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

  மேலும் கடந்த 23.10.2018 அன்று சென்னையில் நமது இரு அமைப்பினரும், கலந்தாலோசித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நவம்பர் 6-ம் தேதி முதல் வெளியாகும் திரைப்படங்களை திரையரங்கினுள் எவரேனும் வீடியோ கேமராவிலோ அல்லது மொபைல்போனிலோ படம் எடுக்கிறார்களா என்று ஒவ்வொரு திரையரங்கிலும் கண்காணிக்க அந்தந்த திரையரங்க உரிமையாளர்கள் ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று முடிவெடுத்திருந்தோம். மேலும் அனைத்து திரையரங்குகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தோம். அதை இக்கடிதத்தின் மூலம் நினைவூட்ட விரும்புகிறோம்.

  கதை திருட்டை கண்டுபிடிப்பது சவாலான விஷயம்: பா.ரஞ்சித் வீடியோ

  ஆனால் தற்போது 5.11.2018-ல் சமூகவலைதளங்களில் தமிழ்ராக்கர்ஸ் சர்கார் படம் வெளியான அன்றைய தினத்தின் மாலையே ஹெச்டி பிரிண்ட்டில் அவர்களது இணையதளத்தில் வெளியாகும் என்று சவால் விட்டுள்ளார்கள். இதற்கு நாம் இணைந்து ஒன்றாக செயல்பட்டு மேற்படி தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனை வெல்ல விடாமல் ஒவ்வொரு திரையரங்கிலும் கண்காணிப்பு ஆட்களை நியமித்து தீவிரமாக கண்காணித்து எவரேனும் படம் பிடித்தால் அவர்களை பிடித்து உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படத்தை வெளியிட்டிருக்கின்றனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக படத்தை இணையத்தில் வெளியிட நிரந்தரத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor vijay, Sarkar, Tamil rockers