Home /News /entertainment /

சக்ரா, திரிஷ்யம்-2 படங்கள் தமிழ் ராக்கர்ஸ்-ல் கசிந்தது!

சக்ரா, திரிஷ்யம்-2 படங்கள் தமிழ் ராக்கர்ஸ்-ல் கசிந்தது!

சக்ரா

சக்ரா

முன்னதாக தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கட்டாயம் பிடித்து சிறையில் தள்ளாமல் விடமாட்டேன் என விஷால் சபதம் ஏற்றிருந்தது நினைவுகூறத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2ம் பாகம் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படங்கள், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கசிந்துள்ளது.

கொரோனா பரவலுக்கு பின்னர் பல்வேறு தொழில்களும் நலிவடைந்தன, தற்போது தான் அவை வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியிருக்கின்றன. கொரோனாவால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் திரைத்துறையும் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. இதனிடையே தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் பலரும் ஓடிடி தளங்களை தேர்வு செய்து வருகின்றனர்

ஒரு பக்கம் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதே குறைந்துவிட்ட நிலையில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மக்களை தியேட்டர்களுக்கு மீண்டும் வர வைக்க உதவியாக இருந்தது.

இந்த நிலையில் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் விஷால் நடிப்பில் உருவான சக்ரா திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகியது. இதில் விஷாலுடன் ரெஜினா காசண்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கிய இப்படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது. சக்ரா ரிலீசான ஒரு சில மணி நேரத்திலேயே அப்படத்தின் ஹெச்.டி பிரிண்டை தமிழ் ராக்கர்ஸ் கசியவிட்டுள்ளது. இதன் மூலம் இப்படத்தின் வசூல் பாதிக்கும் என கருதப்படுகிறது. முன்னதாக தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கட்டாயம் பிடித்து சிறையில் தள்ளாமல் விடமாட்டேன் என விஷால் சபதம் ஏற்றிருந்தது நினைவுகூறத்தக்கது.

திரிஷ்யம்-2


விஷாலின் சக்ரா மட்டுமல்லாமல் இன்று அமேசான் பிரைமில் வெளியான திரிஷ்யம் படத்தின் 2ம் பாகத்தையும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிய விட்டுள்ளனர். பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்து 2013ம் ஆண்டில் வெளியான திரிஷ்யம் கேரளாவில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் வரிசையில் முதல் இடத்தை பிடித்தது. இதில் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக் ஆகியோரும் நடித்திருந்தனர், இப்படத்தை ஜீது ஜோசப் இயக்கியிருந்தார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் திரிஷ்யம் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. இப்படம் ஹிந்தி உள்ளிட்ட மாநில மொழிகளிலும், சீன மற்றும் சிங்கள என சர்வதேச மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 
Published by:Arun
First published:

Tags: Actor vishal, Tamil rockers

அடுத்த செய்தி