ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ்ராக்கர்ஸ் பின்னணியில் விஷால்? - போலீசில் புகார்

தமிழ்ராக்கர்ஸ் பின்னணியில் விஷால்? - போலீசில் புகார்

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

“விஷால் திருட்டு இணையதளத்தின் பின்னணியில் உள்ள நபர்களோடு கைகோர்த்து செயல்படுகிறாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது - ராஜா ரங்குஸ்கி பட தயாரிப்பாளர் சக்தி வாசன்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தமிழ் ராக்கர்ஸ் யார் என்பது குறித்து நடிகர் விஷாலிடம் போலீசார் விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சக்தி வாசன் மனு அளித்துள்ளார்.

ராஜா ரங்குஸ்கி பட தயாரிப்பாளர் சக்தி வாசன், சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “தமிழ் சினிமாக்களை திருட்டுத்தனமாகப் பதிவிறக்கம் செய்து திருட்டு இணையதளங்களில் வெளியிட்டு தமிழக சினிமாத் துறையை அழித்து வரும் தமிழ்ராக்கர்ஸ்.காம் இணையதளத்தைப் பின்னணியில் இருந்து இயக்கும் நபர்களைத் தான் அடையாளம் கண்டுபிடித்து விட்டதாக ஊடகத்திலும், பொது நிகழ்ச்சிகளிலும் அறிவிப்பு செய்த விஷாலை எனது வழக்கிலும், மற்ற வழக்குகளிலும் சாட்சியாக தாங்கள் முன் ஆஜராகி சாட்சி வாக்குமூலம் அளிக்க அவருக்கு உரிய சம்மன் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனு அளித்துள்ளார்.

மேலும், “விஷால் திருட்டு இணையதளத்தின் பின்னணியில் உள்ள நபர்களோடு கைகோர்த்து செயல்படுகிறாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்ராக்கர்ஸ்.காம் பின்னணியில் இருந்து இயக்கும் நபர்கள் யார் என்ற விவரத்தை எங்களுக்குத் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை.

ஆனால் இதுகுறித்து புலனாய்வு செய்து வரும் காவல் துறை அதிகாரிகளிடம் ஆஜராகி அந்த விவரங்களைத் தெரிவிக்கவேண்டிய சட்டப்பூர்வ கடமை விஷாலுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, தாங்கள் உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள் முன்பு விஷால் ஆஜராகி அந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனக்கேட்டு அவருக்கு எழுத்துப் பூர்வமான கோரிக்கை மனு ஒன்றையும் நாங்கள் அளித்தோம்.

ஆனால் அதனைப் பெற்றுக்கொண்டு இது நாள் வரையில் விஷால் தாங்கள் உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள் முன்பு ஆஜராகி அந்த விவரங்களைத் தெரிவிக்க முன்வரவில்லை. இதனால் தங்களுக்கான சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியுமா? சவால் விட்ட விஷால் - வீடியோ

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor vishal, Tamil rockers