தமிழ்ப்படம் 2 : தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

news18
Updated: July 11, 2018, 9:55 PM IST
தமிழ்ப்படம் 2 : தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்
தமிழ்ப்படம் 2
news18
Updated: July 11, 2018, 9:55 PM IST
தமிழ்ப்படம் 2 படத்தின் தயாரிப்பாளருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழ்ப்படம் வெளியானது. இப்படத்தில் தமிழில் வெளியான பல்வேறு படங்களை நகைச்சுவையாக விமர்சித்து படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.

இதே பாணியில் இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்திலும் சிவா கதாநாயகனாக நடிக்க திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் நாளை இப்படம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் சி.எஸ்.அமுதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறமிருக்க படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ மற்றும் அதன் நிறுவனர் சசிகாந்த்க்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது . அதில் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையான அறிவிப்பு ஏதும் பெறாமல் படத்தை வெளியிடுவது தயாரிப்பாளர் சங்கத்தின் விதிமீறலுக்குரியது என்று கூறப்பட்டுள்ளது . இதுகுறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் விளக்கம் தர வேண்டும். இல்லை என்றால் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...