Home /News /entertainment /

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு... கமல் இன்ஸ்டன்ட் சாம்பார் - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு... கமல் இன்ஸ்டன்ட் சாம்பார் - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

அமைச்சர் ஜெயக்குமார் | கமல்ஹாசன்

அமைச்சர் ஜெயக்குமார் | கமல்ஹாசன்

  • News18
  • Last Updated :
    பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “அரசியல் பேசுவதில் இருந்து மாணவர்கள் விலகி நிற்கக்கூடாது. கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மாணவர்கள் ஒதுங்கி நிற்பதால்தான் கறை படிந்துள்ளது. மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    அரசியலில் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்முகத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். வாரிசு அரசியல் சரியாக இருக்காது. அதற்காகவே ஜனநாயகம் வந்தது. ஆனால் தமிழக அரசியலில் குடும்ப அரசியலைப் பிரிக்க முடியாது” என்றார்.

    கமல்ஹாசனின் இந்தப் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “கமல் இன்ஸ்டன்ட் சாம்பார். ஃபுட் மாதிரி திடீரென கருத்து கூறுவார், அதேபோல் திடீரென காணாமல் போய்விடுவார். தேர்தல் நேரத்தில் மட்டும் வருவேன். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. அந்த வீடே அலிபாபா குகை போன்று உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் பயந்து வெளியில் ஓடிவருகின்றனர்” என்றார்.

    மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் தடை கோர முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் ஆள்மாறாட்டத்தை துவங்கியவர் கமல் என்றும், கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் கமல் அரசியல் பேசுவது தவறு என்றும் தெரிவித்தார்.

    படிக்க: ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமலுடன் இணையும் தர்ஷன்!

    படிக்க: சரவணா ஸ்டோர்ஸ் அதிபருக்கு நான் ஜோடியா? - ஹன்சிகா பதில்

    வீடியோ பார்க்க: ஒரே பாட்டு ஓகோன்னு புகழ்... புள்ளிங்கோ புகழ் ஸ்டீபன்

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Bigg Boss Tamil 3, Kamal hassan, Minister Jayakumar

    அடுத்த செய்தி