முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொங்கலுக்கு ரிலீசாகும் தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்

பொங்கலுக்கு ரிலீசாகும் தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்

மாஸ்டர் - ஈஸ்வரன்

மாஸ்டர் - ஈஸ்வரன்

பொங்கலுக்கு தியேட்டரில் 2 படங்களும், ஓடிடி தளத்தில் ஒரு படமும், டிவியில் ஒரி படமும் நேரடியாக வெளியாகவுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கும் பண்டிகை என்றால் பொங்கல் திருவிழா தான். எனவே அதை குறிவைத்து முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். இந்த வருடமும் பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் இந்த ஆண்டு பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமாக அமையப் போகிறது.

இதுவரை பண்டிகை காலத்தில் திரையில் மட்டுமே வெளியாகி வந்த தமிழ் திரைப்படங்கள் இம்முறை மூன்று வகையில் வெளியாகிறது.

மாஸ்டர்:

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

ஈஸ்வரன்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது சிம்புவின் ‘ஈஸ்வரன்’.சுசீந்திரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கிராமத்து பின்னணியில் காதல், செண்டிமெண்ட் கலந்த ஜனரஞ்சகமாக உருவாக்கியிருக்கும் இத்திரைப்படம் குறைந்த நாட்களில் படமாக்கப்பட்டது.

புலிக்குத்தி பாண்டி:

சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் குட்டிப்புலி கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புலிகுத்தி பாண்டி’. இந்தப் படத்தை நேரடியாக பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு பின்னர் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மாறா:

2015-ம் ஆண்டு மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சார்லி. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர்.

திலீப் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் நாளை ஜனவரி 8-ம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.

உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்

First published:

Tags: Actor vijay, Eeswaran Movie, Kollywood, Master, Simbu