• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இளையராஜாவுக்காக திரையுலகம் கூடி நடத்தும் பிரமாண்ட விழா!

இளையராஜாவுக்காக திரையுலகம் கூடி நடத்தும் பிரமாண்ட விழா!

 இந்த விருதில் ரூ. 1,00,000, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

 இந்த விருதில் ரூ. 1,00,000, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இளையராஜாவுக்கு தென்னிந்திய திரைப்பட உலகம் சார்பில் இசையராஜா -75 எனும் தலைப்பில் பிரமாண்டமான விழாவை நடத்த உள்ளோம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இளையராஜாவுக்கு தென்னிந்திய திரைப்பட உலகம் சார்பில் இசையராஜா -75 எனும் தலைப்பில் பிரமாண்டமான விழாவை நடத்த உள்ளோம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார் இளையராஜா. 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.

    5-முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ‘இசையராஜா-75’ என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை வெகு சிறப்பாக நடத்த உள்ளோம்.

    மேற்படி விழாவானது, 2019-பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3- ம் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இளையராஜாவுடன் பணிபுரிந்த இயக்குநர்கள், இசை கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள்.

    எனவே பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் சார்பாக அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: