ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு ரத்து - தனி அலுவலர் அதிரடி நடவடிக்கை

தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு ரத்து - தனி அலுவலர் அதிரடி நடவடிக்கை

நடிகர் விஷால்.

நடிகர் விஷால்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை கூட்டத்தை நடத்துவதற்கு வழிவகையில்லை என்று தனி அலுவலர் அறிவித்துள்ளார்.

  விஷால் தலைமையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் மீது தொடர்ச்சியாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள், கணக்கு வழக்குகளில் குளறுபடிகள் என சர்ச்சைகள் நீடித்ததால் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை தமிழக அரசே ஏற்றது.

  அதன்படி, என்.சேகர் என்ற அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு நியமித்தது. இனிமேல் சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்துமே இவர் மீதான மேற்பார்வையில்தான் நடைபெறும். தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் சங்கத் தலைவர் விஷால். அதில், எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தற்போது தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதம் என்றும் இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரினார்.

  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கத்திற்குள் பிரச்னைகள் நீடிப்பதால் தனி அதிகாரி நியமித்ததாகவும், பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிட்டால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் சங்க நிர்வாகம் ஒப்படைக்கப்படும் எனவும் அரசுதரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

  தொடர்ந்து தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் மட்டும் அளித்த ஒரே புகாரின் அடிப்படையில் தனி அதிகாரியை நியமித்தது தவறு என்றும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் விஷால் தரப்பினர் வாதம் வைத்தனர்.

  இருதரப்புவாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மே 7-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற இருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வழிவகையில்லை என்று தனி அலுவலர் கூறியுள்ளார்.

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor vishal, Tamil cinema Producer council