முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: 2வது தேர்தல் அதிகாரியை நியமித்தது நீதிமன்றம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: 2வது தேர்தல் அதிகாரியை நியமித்தது நீதிமன்றம்!

நீதிமன்றம்

நீதிமன்றம்

2023 முதல் 2026 வரையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடக்க உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலை நடத்த இரண்டாவது தேர்தல் அதிகாரியை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. 

2023 முதல் 2026 வரையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடக்க உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் சில உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதன் அடிப்படையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலை நடத்த பாரதிதாசன் என்ற ஓய்வு பெற்ற நீதிபதியை இரண்டாவது தேர்தல் அதிகாரியாக உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் தேனாண்டல் முரளி தலைமையில் ஒரு அணியினரும் கௌரவச் செயலாளராக உள்ள மன்னன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட உள்ளனர்.

தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது விதிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என மாற்றப்பட்டுள்ளன. மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய திரைப்பட ஆகிய சங்கங்களில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் மட்டும் இதில் போட்டியிடலாம் மற்ற சங்கங்களில் நிர்வாகிகளாக இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட முடியாது எனவும் விதிகளை மாற்றப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai High court, Election, Tamil cinema Producer council