Home /News /entertainment /

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் தேவையில்லை - ஒரே முடிவில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் தேவையில்லை - ஒரே முடிவில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர்!

பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தயாரிப்பாளர்கள்

பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தயாரிப்பாளர்கள்

தமிழ்த்  திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் தேவையில்லை என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை குறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், முரளிதரன், பாரதிராஜா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பாரதிராஜா, “தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என்பது தேவை இல்லை. ஒற்றுமை இல்லாமல் அனைவரும் பல அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். ஆனால் பலதரப்பட்ட போட்டி வரும்போது சேவை மனப்பான்மை இருக்காது. பதவிக்கு வரும் நபர்கள் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விட்டு செயலாற்ற வேண்டும்.

தேர்தல் இல்லாமல் வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு ஒத்துப்போகும் ஒருவர் தலைமை இடத்திற்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார். பொது வாழ்வில் குற்றம் இல்லாதவர் தான் தேர்தலில் நிற்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “நாங்கள் பதவிக்கு வரவேண்டுமென்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுக்கவில்லை. நாகரீகமான முறையில் ஒரு சங்கம் இருக்க வேண்டும் என்பதே நோக்கம். பதவியில் இருந்தாலும் ஒற்றுமை இல்லாததால் தயாரிப்பாளர் சங்கத்தில் எதையும் சாதிக்க முடியவில்லை. நான் தலைவராக இருந்த போதும் இதே நிலைதான் இருந்தது. பாரதிராஜா இந்த பதவிக்கு போட்டியிட மாட்டார் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன்” என்றார்.

மேலும் படிக்க: அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் முயற்சியில் களமிறங்கிய விஜய்!
Published by:Sheik Hanifah
First published:

அடுத்த செய்தி