நடிகர் சிம்புவிற்கு இனிமேல் சங்கத்தின் சார்பில் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு!
ஈஸ்வரன் படத்திற்கு விதித்த தடையை விலக்கிக் கொள்வது என்றும் இனிமேல் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்கப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஈஸ்வரன் பட போஸ்டர்
- News18
- Last Updated: January 14, 2021, 5:52 AM IST
நடிகர் சிலம்பரசனுக்கு இனிமேல் சங்கத்தின் சார்பில் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தில் முழுமையாக நடித்த கொடுக்காமல் விட்டதற்காக தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நட்டத்தை சிலம்பரசன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்று இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி ஏழரை கோடி ரூபாய் நட்டத்தில் சிம்புவின் அடுத்த மூன்று படங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாயை சங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தற்போது ஈஸ்வரன் வெளியாக இருக்கும் நிலையில் அவருக்கு வழங்க வேண்டிய சம்பளத்திலிருந்து இரண்டரை கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனம் சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதனை வழங்க முடியாது என்று தயாரிப்பாளரும் சிலம்பரசன் தரப்பும் வாதிட்டனர். சிம்பு படம் வெளியாகக் கூடாது என்று சிலர் சதி செய்வதாக சிம்புவின் தந்தை டி ராஜேந்திரன் பேட்டி அளித்திருந்தார். Also read... தியேட்டரில் பொறி பறக்கும்... ஈஸ்வரன் படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் பேச்சு!
இதே நேரத்தில் சிலம்பரசன் பணத்தை கொடுக்கும் வரை ஈஸ்வரன் படத்தை வெளியிட வேண்டாம் என்று டிஜிட்டல் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் ஒன்றை எழுதி இருந்தது.
இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் கூடியது. இதில் ஈஸ்வரன் படத்திற்கு விதித்த தடையை விலக்கிக் கொள்வது என்றும் இனிமேல் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்கப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனால் ஈஸ்வரன் திரைப்படத்திற்கு இருந்த தடை நீங்கியது. திட்டமிட்டபடி இன்று ஈஸ்வரன் படம் திரைக்கு வருகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தில் முழுமையாக நடித்த கொடுக்காமல் விட்டதற்காக தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நட்டத்தை சிலம்பரசன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்று இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி ஏழரை கோடி ரூபாய் நட்டத்தில் சிம்புவின் அடுத்த மூன்று படங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாயை சங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தற்போது ஈஸ்வரன் வெளியாக இருக்கும் நிலையில் அவருக்கு வழங்க வேண்டிய சம்பளத்திலிருந்து இரண்டரை கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனம் சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதனை வழங்க முடியாது என்று தயாரிப்பாளரும் சிலம்பரசன் தரப்பும் வாதிட்டனர். சிம்பு படம் வெளியாகக் கூடாது என்று சிலர் சதி செய்வதாக சிம்புவின் தந்தை டி ராஜேந்திரன் பேட்டி அளித்திருந்தார்.