நடிகைகளின் சம்பள பட்டியல் - முதலிடத்தில் நயன்தாரா... எவ்வளவு தெரியுமா?

நடிகைகளின் சம்பள பட்டியல் - முதலிடத்தில் நயன்தாரா... எவ்வளவு தெரியுமா?

நயன்தாரா

நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4கோடி வரை சம்பளம் பெற்று முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
திரைப்படங்கள் வெற்றி பெறுவதைப் பொறுத்து நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்றனர் தயாரிப்பாளர்கள். திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவினால் அதில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் மார்க்கெட்டும் சரிவை நோக்கிச் செல்லும்.

கொரோனாவுக்கு பின்னர் திரைத்துறை பெருமளவில் பொருளாதார இழப்பை சந்தித்திருக்கும் நிலையில் ஒரு சில நடிகர்கள் தாங்களாகவே முன் வந்து சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைத்துக் கொண்டனர்.

தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பில் ஹீரோயின்களின் புதிய சம்பள பட்டியல் தயாராகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பட்டியலில் நடிகை நயன்தாரா ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து தனது சம்பளத்தை தக்கவைத்தும், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார்.

மேலும் படிக்க: மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா - இயக்குநர் யார் தெரியுமா?

2-வது இடத்தில் நடிகை காஜல் அகர்வால் ரூ.2 கோடி வரை சம்பளம் பெறுகிறார். த்ரிஷா, தமன்னா, எமி ஜாக்‌ஷன் ஆகிய மூவரும் ரூ.1.50 கோடியும், ஸ்ருதிஹாசன் ரூ.1 கோடியும், கீர்த்தி சுரேஷ் ரூ.80 லட்சமும் பெறுகிறார். நடிகை அஞ்சலி ரூ.70 லட்சம், ரெஜினா கசாண்ட்ரா ரூ.60 லட்சம், ஸ்ரேயா ரூ. 50 லட்சம் ரூபாயும் சம்பளம் பெறுகின்றனர்.ஸ்ரீதிவ்யா, நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா ஆனந்த் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் ரூ.40 லட்சம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிவேதா தாமஸ், மஞ்சிமா மோகன் ஆகியோர் ரூ.35 லட்சம் ரூபாயும், பிரணிதா, பாவனா ஆகியோர் ரூ.30 லட்சம் ரூபாயும், அனுபமா பரமேஸ்வரன் ரூ.20 லட்ச ரூபாயும், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ரூ.10 லட்சம் ரூபாய் வீதமும் சம்பளத்தை நிர்ணயித்திருப்பதாக கூறப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: