Home /News /entertainment /

திரைத்துறையினர் அரசுக்கு நிதியுதவி வழங்கவேண்டும் - ஆர்.கே. செல்வமணி

திரைத்துறையினர் அரசுக்கு நிதியுதவி வழங்கவேண்டும் - ஆர்.கே. செல்வமணி

ஆர்.கே.செல்வமணி

ஆர்.கே.செல்வமணி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திரைத்துறையினர் அரசுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார்.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது பேசிய அவர், “கொரோனாவுக்கு தற்போது வரை மருந்து இல்லாமல் இருப்பதால் இது ஒரு மிக பெரிய கொடுமையான நோய். ஒரு முறை இந்த நோய் வந்துவிட்டால் இதனை கட்டுபடுத்த முடியாமல் போய் விடும்.

    அமெரிக்கா , இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளே இதனை சமாளிக்க முடியாமல் இருக்கின்றது. எனவே பொதுமக்கள் இதனை உணர வேண்டும். இந்தியாவில் போதுமான அளவிற்கு வென்டிலேட்டர் வசதி இல்லை. இந்த நோய் வந்துவிட்டால் அதனை தடுக்க முடியாமல் போய் விடும்

    பெஃப்சி சார்பாக திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ நிதி உதவி கேட்டிருந்தோம் அதற்காக தற்போது வரை 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி உதவி வந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் 2400 அரிசி மூட்டைகள் நன்கொடையாக வந்துள்ளன. பெஃப்சி சார்பாக திரைப்பட தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த உதவி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது .

    திரைப்பட கலைஞர்கள் இந்த நேரத்தில் அரசுக்கு நிதி உதவி வழங்க வேண்டும். பெஃப்சி சார்பாக 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

    மேலும் படிக்க: நிதியை நிறுத்துவோம்... உலக சுகாதார அமைப்பிற்கு டிரம்ப் எச்சரிக்கை


    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Lockdown

    அடுத்த செய்தி