• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் மோதல் - பாலாஜிக்கு சனம்ஷெட்டியின் 'நச்' கேள்விகள்!

பிக்பாஸ் மோதல் - பாலாஜிக்கு சனம்ஷெட்டியின் 'நச்' கேள்விகள்!

பாலாஜி | சனம்

பாலாஜி | சனம்

பாலாஜிக்கும், ஷனம் ஷெட்டிக்குமான மோதல் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்தபிறகும் தொடர்கிறது.

  • Share this:
Behindwoods விருதை திருப்பிக்கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள பாலாஜிக்கு, பிக்பாஸில் சக போட்டியாளராக இருந்த ஷனம் நச்சுனு நான்கு கேள்விகளை கேட்டுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. இந்த சீசனில் ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், ஆரி, சுசித்ரா, ரேகா, சோம் சேகர், பாலாஜி, முருகதாஸ் , அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன், ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, அனிதா சம்பத், கேப்ரில்லா, சூப்பர் சிங்கர் வின்னர் ஆஜித் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பாலாஜியின் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அனைத்து போட்டியாளர்களுடன் பாரபட்சமில்லாமல் மல்லுக்கட்டினார். தனக்கு தோன்றுவதை வெளிப்படையாக பேசி சிக்கலிலும் மாட்டிக் கொண்டார். குறிப்பாக, ஆரி, ஷனம் ஆகியோருடன் கடுமையான வார்த்தை மோதல்களில் பாலாஜி ஈடுபட்டார். அர்ச்சனாவையும் வார்த்தைகளால் விமர்சிக்க தவறவில்லை. இதனால், கமலின் கோபத்துக்கு ஆளான பாலாஜி, தன்னுடைய அனுகுமுறையை மாற்றிக் கொள்ளுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டார்.

ஒரு சில சமயங்களில் ஆரியும், பாலாஜியும் மோதிக்கொள்ளும் அளவுக்கு உக்கிரமான மோதல்கள்கூட அரங்கேறின. மேலும், ஷனம் ஷெட்டியை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பாலாஜி பேசியது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பாலாஜியை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற குரல்கள் எல்லாம் எழுந்தன. ஆனால், போட்டியின் முடிவில் முதல் இடத்தை ஆரியும், இரண்டாம் இடத்தை பாலாஜியும் வெற்றிப் பெற்றனர். ஆரி முதல் இடத்தை பிடித்ததில் யாருக்கும் வியப்பில்லை என்றாலும், பெண்களை, சக போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்த பாலாஜி, 2 ஆம் இடத்தை பிடித்ததை பலரும் ரசிக்கவில்லை.

Also read... தெலுங்கில் அறிமுகமாகும் கர்ணன் பட நாயகி...!

இந்நிலையில், பாலாஜிக்கும், ஷனம் ஷெட்டிக்குமான மோதல் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்தபிறகும் தொடர்கிறது. அண்மையில், Behindwood விருது நிகழ்ச்சியில் Biggest Sensation On Reality Television என்ற பட்டம் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. அப்போது, தான் பேசியதை Behindwood நிறுவனம் ஒளிபரப்பாமல் கட் செய்ததால், அவர்கள் கொடுத்த அந்த விருதை திருப்பிக் கொடுக்கப்போவதாக பாலாஜி கூறியுள்ளார். சக போட்டியாளர்களை விமர்சிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பேசியதை, அவர்கள் நீக்கியதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் டிவிட்டரில் கூறியிருந்தார்.

அவரின் இந்தப் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள ஷனம், பிக்பாஸ் ஷோவில் தன்னை தரக்குறைவாக பேசியபோது சகபோட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியின் பங்கெடுக்காத பெண்களின் எதிர்காலத்தை நீங்கள் நினைத்தீர்களா?, என்னையும், மற்ற போட்டியாளர்களையும் மோசமான வார்த்தைகள் மற்றும் Attitude -ஐ காண்பிக்கும்போது, எதிர்காலத்தைப் பற்றி நினைத்தீர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் இழந்த 2 நிமிட புகழுக்காக என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் ஷனம் கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: