ஷிவானி முதல் கார்த்திக் ராஜ் வரை - பிரபல சீரியல்களிலிருந்து பாதியில் வெளியேறிய நட்சத்திரங்கள்

ஷிவாணி - காரத்திக் ராஜ்

திருடாதே சீரியலில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் ரியா நடித்து வந்தார். மார்ச் மாதம் வரை தொடரில் நடித்த அவர், சொந்த காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

  • Share this:
பிரபலமான ஷோ மற்றும் சீரியல்களில் நடித்து வரும் முன்னணி கதாப்பாத்திரங்கள், தங்களின் சொந்த காரணங்களுக்காக திடீரென விலகுவார்கள். அந்தவகையில், எந்தெந்த ஷோக்களில் இருந்து யார் யார் வெளியேறி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஷிவானி நாராயணன்

கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன், ரெட்டை ரோஜாவில் அனுராதா - அபிராமி என இரட்டைக் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். அப்போது, பிக்பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு வந்ததால், ரெட்டை ரோஜா தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக சாந்தினி தமிழரசன் அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

கார்த்திக் ராஜ்

செம்பருத்தி சீரியலில் லீட் ரோலில் கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். 2017 ஆம் ஆண்டு தொடங்கிய அந்த சீரியலில் ஆதி என்கிற ஆதித்ய புருஷோத்தமனாக நடித்தார். திடீரென கடந்த ஆண்டு அந்த ஷோவில் இருந்து விலகினார். விலகலுக்கான காரணம் தெரியவில்லை. மற்றொரு நல்ல வாய்ப்புக்காக இந்த தொடரில் இருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது. வி.ஜே. அக்னி, கார்திக் ராஜூக்கு மாற்றாக ஆதி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

திவ்யா ஸ்ரீதர்

கடந்த ஜூன் மாதம் வரை மகராசி தொடரில் பாரதி புவியரசன் என்ற பெண் லீட் கதாப்பாத்திரத்தில் திவ்யா ஸ்ரீதர் நடித்து வந்தார். தமிழகம் முழுவதும் 2வது அலை கொரோனா வைரஸ் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து அவர் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. கல்யாண பரிசு தொடரில் நடித்த ஸ்ரீதிகா சனீஷ் பாரதி புவியரசனாக நடிக்கிறார்.

Also Read : 2002-ல் ரஜினிக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்த பிரபல நடிகையின் மகள்!

அருண்

பூவே உனக்காக தொடரில் கதிர் கதாப்பாத்திரத்தில் அருண் நடித்து வந்தார். லீட் கேரக்டரில் நடித்த அருண், ஜூன் 2 ஆம் தேதி அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் தெரியவில்லை. பகல் நிலவு மற்றும் பிரியமானவள் தொடரில் நடித்த முகமது அசீம், கதிர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

ஷாமிலி சுகுமார்

ரோஜா தொடரில் பிரியா மற்றும் அனு கதாப்பாத்திரங்களில் வில்லியாக ஷாமிலி சுகுமார் நடித்தார். தாய்மை அடைந்த காரணத்தால், அந்த ஷோவில் இருந்து விலகுவதாக அன்னையர் தினத்தன்று அறிவித்தார்.

Also Read : பிசாசு-2 படத்துக்காக ஆண்ட்ரியா எடுத்த ரிஸ்க்.. கோடிகளில் சம்பளமாம்

ரேஷ்மா வெங்கடேஷ்

அன்புடன் குஷி தொடரில், குஷியாக மான்சி ஜோசி நடித்து வந்தார். அவருடைய விலகலுக்குப் பிறகு குஷியாக நடித்த ரேஷ்மா வெங்கடேஷ், அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு குஷியாக ஷ்ரேயா அன்சன் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ். பூவே உனக்காக தொடரில் முதன்முதலாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். உயர் கல்வி படிக்க வேண்டியிருப்பதால், அந்த சீரியலில் இருந்து விலகுவதாக கடந்த மார்ச் மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

ஷாலி அவினேஷ்

அம்மன் தொடரில் லோகாம்பாள் கதாப்பாத்திரத்தில் ஷாலி அவினேஷ் நடித்தார். கர்ப்பமாக இருப்பதால் இருப்பதால், நடிப்புக்கு இடைவெளிவிடுவதாக கடந்த லாக்டவுனில் அறிவித்தார். அவருடைய விலகலுக்குப் பிறகு நிஷா ஜகதீஸ்வரன் லோகாம்பாளாக நடித்து வருகிறார்

சுஷ்மா நாயர்

திருமகள் சீரியலில் பிரகதி மணிகண்டனாக சுஷ்மா நாயர் நடித்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்த அந்த தொடரில் நடித்து வந்த அவர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சொந்த காரணங்களால் திருமகள் சீரியலில் நடிக்க முடியவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

Also Read : முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகை சஞ்சனா சிங் - ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

ரியா

இதயத்தை திருடாதே சீரியலில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் ரியா நடித்து வந்தார். மார்ச் மாதம் வரை தொடரில் நடித்த அவர், சொந்த காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருடைய கதாப்பாத்திரத்தில் அம்மன் நாடகத்தில் நடித்த லாவண்யா மாணிக்கம் நடிக்கிறார்.

ஸ்ரீநிதி சுதர்ஷன்

யாரடி நீ மோகினி தொடரில் கடந்த இரண்டு வருடங்களாக ஸ்ரீநிதி சுதர்சன் நடித்தார். சட்டப் படிப்பை படித்துக் கொண்டே சீரியலிலும் தொடர்ந்து நடித்த அவர், அந்த தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஷாலினி ரஞ்சன் ஜனனி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
Published by:Vijay R
First published: