கொரோனாவுக்கு மேலும் ஒரு பிரபல நடிகர் பலி! - தொடரும் சோகம்..

நடிகர் சுபா வெங்கட்

கடந்த மாதம் நடிகர் சுபா வெங்கட்டிற்கு கொரோனா தொற்று உறுதியானது.

  • Share this:
பிரபல நடிகரான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 60.

கொரோனா பரவலின் இரண்டாம் அலையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை மிகவும் கொடியதாக மாறியுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக திரைத்துறையினர் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை சந்தித்து வருவது திரைத்துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் நகைச்சுவை நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி, நிதிஷ் ராணா, பாடலாசிரியர் அருண் காமராஜாவின் மனைவி, பாடகர் கோமகன், கில்லி பட புகழ் நடிகர் மாறன், நடிகர் ஃப்ளோரன்ட் பெரேரா, சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் என அடுத்தடுத்து நடிகர்கள் கொரோனாவால் உயிரிழந்து வருவது தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு பிரபல நடிகர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட் சுபா எனப்படும் வெங்கட கிருஷ்ணன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா துறையில் பல வடிவங்களில் பணியாற்றி வந்துள்ளார். யுடியூபில் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களையும் செய்து வந்தார்.

கடந்த மாதம் நடிகர் சுபா வெங்கட்டிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் கடந்த 25 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.48 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.பிரபல தயாரிப்பாளரும், நடிகர் சுபா வெங்கட்டின் நெருங்கிய நண்பருமான டி.சிவா, நடிகர் சுபா வெங்கட்டின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,
Published by:Arun
First published: